பெரஹரா, திருவிழா நடத்தலாம், பார்வையாளர்கள் வர முடியாது

0
8

சம்பிரதாய மற்றும் சமயச் சடங்குகளுக்கு முன்னுரிமை வழங்கி பிரதான வழிபாட்டுத் தலங்களிலும் தேவாலயங்களிலும் இம்முறைய பெரஹராக்களை நடத்துமாறு ஜனாதிபதி தியவதன நிலமேக்களையும் பஸ்நாயக்க நிலமேக்களையும் வேண்டியுள்ளார்.

தலதா மாளிகை, கதிர்காமம், தெவிநுவர, சபரகமுவ விகாரைகளை முன்னிறுத்தி நடைபெறுகின்ற பெரஹராக்களை கொவிட் 19 பரவலைக் கருத்திற் கொண்டு சுகாதார ஒழுங்குகளைப் பேணி நடத்துமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்முறை எந்த வழிபாட்டுத் தலங்களினதும் ஊர்வலங்களில் கலந்து கொள்வதற்கோ பார்வையிடுவதற்கோ பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவி்ல்லை. நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கின் சில பிரதேசங்களில் இருந்து கதிர்காம உற்சவத்துக்கு பாதயாத்திரை செய்வதும் இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது.

பெரஹராக்களில் கலந்து கொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு வெளியிலிருந்து வரும் கலைஞர்கள் தமது பிரதேசத்தின் பொதுச் சுகாதார அதிகாரியிடமிருந்து அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here