“பெல்பருக்காக பிரித்தானியா மன்னிப்புக் கோருவது கடமை”

0
0

பெல்பர் பிரகடனத்தின் நூறு வருட பூர்த்தியை நினைவுகூரும் நிகழ்வில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆற்றிய உரை.

இவ்வருடம் பெல்பர் பிரகடனத்திற்கு நூறு வருடங்கள் பூர்த்தியடைகின்றது. பிரித்தானியாவின் வெளிநாடுகளுக்கான செயலாளராக இருந்த ஆர்தர் பெல்பர்ஸினால் பலஸ்தீனத்தின் தலைவிதியும், அடையாளமும் மாற்றப்பட்டது. பலஸ்தீன மக்களின் வரலாற்றை மாற்றியமைத்து சியோனிஸ அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மூலம் அது நிறைவேறியது. துயரம் நிறைந்ததொரு நூற்றாண்டு நினைவுகளுடன் அநீதிக்கான விடியலையும் சமாதானத்தையும் அடைவதற்காக பலஸ்தீனத்தின் துன்பியல் வரலாற்றை ஒருமுறை மீள்பார்வைக்குட்படுத்துவது அவசியமாகும்.

ஐக்கிய இராச்சியமானது அதனது நெறிமுறை தவறிய ஆட்சியாளர்களினால் அத்துமீறிய ஆக்கிரமிப்புக்குள்ளான ஒரு சமூகத்தின் பொறுப்புக்கூறலிலிருந்து இலாவகமாகவே நழுவிக்கொள்கிறது. பெருமைக்குரிய கலாசார பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்ட பலஸ்தீனமானது, 1947 காலப்பகுதியில் 70,000 மக்கள் தொகையையும் 28,000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் கொண்ட நாடாக காணப்பட்டது. சகவாழ்வும் விட்டுக்கொடுப்பும் அம்மக்களிடம் இயல்பாகவே ஒன்றிணைந்திருந்தது.

ஜெயஸ்திய, கனானிய கோத்திரங்களினால் உருவாக்கப்பட்ட ஜெரூஸலம், ஹய்பா, ஜப்பா போன்ற துறைமுகங்களும் விவலிய நகரங்களான காஸா, பெத்லஹேம், நப்லஸ், ஹெப்ரோன், நஸ்றத் போன்றனவும் உலகிலேயே பண்டைய நகரமான ஜெரிகோயும் நாக்கடல் மற்றும் பசுமைநிறைந்த ஜோர்தானிய வெளிகளும் பலஸ்தீனத்தின் நாகரீகத் தோற்றத்தை பரைசாற்றுகின்றன. கல்வி, கலாசார நிறுவனங்களையும், ஏற்றுமதி விழயாபாரத்தையும், சுற்றுலா துறையையும் தன்னகத்தே கொண்ட பலஸ்தீனமானது அரபிகளை கொண்டே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. குறிப்பாக பெரும்பான்மை முஸ்லிம், கிறிஸ்தவர்களையும் மற்றும் மிகச்சிறுபான்மை யூதர்களையும் கொண்டிருந்தது.

ஆனால் பெல்பர் பிரகடனம் ஒட்டுமொத்த பலஸ்தீன் பாரம்பரிய சுதேச மக்களின் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டிப் புதைத்தது. சுதேச பெரும்பான்மை முஸ்லிம், கிறிஸ்தவ அரபுகள் யூதரல்லாத சமூகம் என அப்பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டார்கள்.  மேலும் காலணித்துவமே உருவான பெல்போரஸ் அங்கு வாழ்ந்த சுதேச அரபுகளின் உரிமைகளை மறுத்தது மட்டுமல்லாமல் 1922 இல் சியோனிசம் பற்றி அவர் குறிப்பிடுகையில் ‘சியோனிசம், சரியானாலும் பிழையானாலும் அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அது வேரூண்றிப் போன ஓரு பாரம்பரியமாகும். மேலும் அது தற்காலத் தேவையையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையுமாகும், இங்கு வாழும் 700,000 அரபுகட்களினது எதிர்பார்ப்பு மற்றும் ஓரவஞ்சனைகளை விடவும் ஆழமானதாகும்.’

பலஸ்தீன மக்களின் வெளியேற்றம், 1948ல் நக்பாவில் ஏற்பட்ட நிகழ்வு மற்றும் பலஸ்தீன் பற்றிய சர்வதேசத்தின் நிலைப்பாடுகளை பெல்பர் பிரகடனத்தினூடாக அனுமானித்துக்கொள்ள முடியும். ஓர் நூற்றாண்டு கடந்த பின்பும் பலஸ்தீன் மக்களின் உரிமைகளை பெற்றுத்தரும் ஓர் பிரகடனமாக சர்வதேச சமூகம் இதனை கருதுகின்றது. சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டையும் அதன் நம்பகத்தன்மையையும் இது கேள்விக்குள்ளாகின்றது.

பெல்பரின் கசப்பான வரலாறு

பெல்பர் பிரகடனம் எமது தலைவிதியை மாற்றிவிட்ட ஒரு பெரும் நிகழ்வாக கருதப்பட்டாலும் அது பிரித்தானிய அரசயில்வாதிகளின் ஏகோபித்த ஒரு கருத்தாக காணப்படவில்லை. பலஸ்தீனத்திற்கான பிரித்தானிய ஆணையகத்தினூடாக பெல்பெர் பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் பிரித்தானியாவானது பெல்பரினுடைய மடமைநிறைந்த கருத்தியலுக்கும் பலஸ்தீனத்தின் யதார்த்தத்திற்குமிடையில் சமநிலை பேணுவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டது. பலஸ்தீனத்தை நிர்வகித்த பல பிரித்தானிய ஆணைக்குழுக்கள் பலஸ்தீன பூர்வீகக் குடிகள் பற்றிய உண்மைத்தன்மையை லண்டனுக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தது.

அதன் பிரதிபலனாக 1922ஆம் ஆண்டு பெல்பர் பிரகடனத்தை ஒரு பகுதியாகக்கொண்ட பலஸ்தீனத்திற்கான பிரித்தாணிய ஆணையகத்தை பிரிதடதானிய பாராளுமன்றம் நிராகரித்தது. பிரிதடதானிய அமைச்சரவையின் ஒரேயொரு யூத அமைச்சராகவிருந்த சேர் எட்வின் மோண்டே தனது ஆதரவை இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார். ‘நான் யூத குடியேற்றத்தை பலஸ்தீனில் ஆதரித்த போதிலும் ஒரு இனக்குழுமாத்திரம் மதவெறியுடன் உரிமை கோருவதற்கும் குறுகிய சிந்தனையுடன் பலஸ்தீனத்தை யூத பூமியாக கோருவதற்கும் ஒரு இனக்குழுவிற்கு மாத்திரம் உரிமை இல்லை’ என்பதை கூறினார்.

பெல்பர் பிரகடனத்தின் பிரதிபலனாக உருவான இஸ்ரேலின் தோற்றம் சர்வதேச சமூகத்தினால் ஒரு அவமரியாதை குறைவான செயற்பாடாக பார்க்கப்பட்டது. ஆனால் 30 வருடங்களின் பிறகு 1947.11.29 இல் ஐநா சபையினால் வரையப்பட்ட 181(2) என்ற தீர்மானமானது பலஸ்தீனத்தை இரட்டை தேசங்களாக பிளவுபடுத்தி மீண்டும் பலஸ்தீன மக்களின் அபிலாஷைகளுக்கும் உரிமைகளுக்கும் விருப்புக்களுக்கும் எதிராக ஓர் அழைப்பை விடுத்தது. அதனைத் தொடர்ந்து பலஸ்தீன தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான கோரிக்கைகளை பிரித்தானிய அரசினால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டது.

சியோனிசத்தை ஆதரித்து யூத தேசமொன்றை பலஸ்தீன மண்ணில் உருவாக்கியது மாத்திரமல்லாமல் அதற்கு பிற்பாடு காணப்பட்ட அசமந்தப் போக்கானது நக்பா இன அழிப்பிற்கு வித்திட்டது. மேலும் மூன்றில் இரண்டு பங்கான பலஸ்தீனர்களின் அகதி வாழ்வுக்கு காரணமானது. இதன் மூலம் குறைந்தது 418 பலஸ்தீன் கிராமங்கள் அழிக்கப்பட்டன. ஐநாவின் 181ஆம் இலக்க தீர்மானமானது பலஸ்தீன மக்களின் கட்டாய இடம்பெயர்வுக்கு அனுமதிக்காத போதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தோல்விகண்டுள்ளது. அதேபோன்று பலஸ்தீன் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் சர்வதேச சமூகமும், ஐநா சபையின் பராமுகமாக இருந்து வருகின்றது.

பெல்பர் முதல் 2017 வரை

இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்த ஆக்கிரமிப்பு மீதமிருக்கும் 22 வீதமான பலஸ்தீன் பூமிiயும் காவுகொண்டு வருகிறது. பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்களால் கிழக்கு ஜெரூஸலமு; ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பலஸ்துpன விடுதலை இயக்கம் முடியுமான அளவிற்கு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்ட போமிலும் ஐநா சபையின் தீர்வுத் திட்டத்தில் அங்கீகரித்த 22 வீத பலஸ்தீன் பூமியைக் கூட ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் மறுக்கிறது. தொடர்ந்தேர்ச்சியான இஸ்ரேலிய குடியிருப்புக்கள் ஐநா சபையின் இருநாட்டுத் தீர்வையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதோடு இஸ்ரேலிய அரசின் உள்நோக்கத்தையும் தெளிவாக பறைசாற்றுகின்றது.

பலஸ்தீன் வஜடுதலை இயக்கம் இஸ்ரேலினுடைய இருப்பையும் அதன் உரிமைகளையும் அங்கீகரித்த போமதிலும் மத்திய கிழக்கு சமாதானப் பேச்சுவார்தைகளில் பங்குபற்றிய போதிலும் சமாதானத்தை அடைவதற்காக முழுமையான விட்டுக்கொடுப்புடன் நடந்துகொண்டபோதிலும் இஸ்ரேலின் அசிரத்தையான தன்மை சமாதானத்தை அது நாட்டங்கொள்ளவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும். மேலும் பேச்சுவார்தைகளையும் விட்டுக்கொடுப்புக்களையும் இஸ்ரேல் பலஸ்தீன் நிலங்களை சுரண்டுவதற்கும் மேலும் ஆக்கிரமிக்களை மேற்கொள்ளும் உத்தியாகவும் கண்துடைப்பபகவும் பயன்படுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here