பேச்சுவார்த்தைகளைப் பிற்போடுமாறு கோருகின்றது சிரிய எதிரணி

0
0

ஐ.நா. மத்தியஸ்தம் வகிக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டங்களை இடைநிறுத்துமாறு சிரிய எதிரணியினர் ஐ.நா.வை கோரி வருகிறது. சிரியாவில் அதிகார மாற்றம் இடம்பெறும் வரை பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் எண்ணம் தமக்கில்லை என எதிரணி தெரிவித்துள்ளது.

சிரிய அரசாங்கம் எதிரணியினர் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தவே பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்துகின்றது. ஜனாதிபதி அஸதிடமிருந்து அதிகாரம் கைமாறும் வரை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமற்றது என எதிரணி கூறுகின்றது.

தற்போது அமுலில் உள்ள போர் நிறுத்தத்தை மீறி வரும் சிரிய அரசாங்க இராணுவம் அதிகாரத்தைக் கைமாற்றுவதில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் ஜெனீவாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகளை சிரிய எதிரணியினர் தவிர்த்துள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமே அதிகாரம் கைமாறும் என இடையீட்டாளர்கள் தெரிவிக்கின்றபோதும், அதற்கான சமிக்ஞைகள் சிரியாவின் அரசியல் வட்டாரங்களில் தென்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மோதலின் 5 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை சர்வதேச சமூகம் முன்வைக்கத் தவறிவிட்டது. சிரியாவின் இராணுவம் பொதுமக்களை தொடர்ந்தும் இலக்கு வைத்து வருகின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் ரியாத் ஹிஜாப் தெரிவித்துள்ளார்.

பஷரின் அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தை என்பது ஒரு பாதுகாப்புப் போர்வை என அவர் வர்ணித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here