பேராசிரியர் ஹரிணி தேமச தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு

0
0

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கலாநிதி ஹரிணி அமரசூரியவை தேசிய மக்கள் சக்தி பெயரிட்டுள்ளது. திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் ஹரிணி, தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

தேசிய தொழில்வாண்மையாளர் சங்கத்தின் (UPM) கல்விக் கொள்கைகள் குழுவின் அங்கத்தவரான இவர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிலும் இவர் அங்கம் வகித்துள்ளார்.

முன்னதாக தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நியமனம் சுனில் ஹந்துன்னெத்திக்கு வழங்கப்படுவதாக எதிர்பார்க்கப்பட்ட போதும், தான் தோல்வி அடைந்தால் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்வதற்கு விரும்பவில்லை என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நியமனம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here