பொதுஜன பெரமுனவுக்கு தலைமை தாங்கி தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குகிறார் மஹிந்த

0
0

நான் பொதுஜன பெரமுனவுக்கு தலைமை வகிப்பேன். அரசிலமைப்பில் திருத்தமொன்று செய்தால் என்னால் போட்டியிடவும் முடியும் என்றொரு கருத்தும் இருக்கிறது. அது தொடர்பில் நீதிமன்றில் போராடுவார்கள். ஆனாலும் இந்த அபாய நேர்வுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் நான் இன்னும் தீர்மானிக்கவில்லை என தனது இந்திய விஜயத்தின் போது இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது சகோதரன் 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவராக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயும் அதனுடன் இணைந்த கட்சிகளும் மக்களின் கோரிக்கை யார் என்பதை அறிந்து முடிவெடுக்கும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்த வயதெல்லை 30 இல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக எனது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இருந்தாலும் எனது சகோதரனுக்குப் போட்டியிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தன்னை இணைத்துக் கொண்டு செயற்படுவதற்குத் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here