பொதுத் தேர்தலில் இடது சாரிகள் தனிக் கூட்டு

0
0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் சில இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்கப்போவதாக லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் வடமத்திய மாகாண ஆளுநர் கலாநிதி திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

மஹஜன எக்ஸத் பெரமுன, ஸ்ரீலங்கா மஹஜன பெரமுன, கொமியூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடது சாரி முன்னணி ஆகிய கட்சிகள் இதுவரை இதற்கான இணக்கத்தைத் தெரிவித்திருக்கின்றன. ஜேவிபியின் இடது சாரிக் கொள்கைகள் தற்போது பலவீனமடைந்திருப்பதால் புதிய இடது சாரி முன்னணிக்கு சமூகத்தில் இடம் கிடைத்திருப்பதாகவும், அதனாலேயே இந்தக் கூட்டணியை ஆரம்பிக்கத் தீர்மானித்ததாகவும் கலாநிதி திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இந்தக் கூட்டணிக்கான பெயரும் சின்னமும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here