பொருளாதார மத்திய நிலையங்களுடாக மரக்கறி மற்றும் பழங்களை விநியோகிப்பதற்கான நடைமுறைகள்

0
1

பசில் ராஜபக்ஷ தலைமையில் நிறுவப்பட்டுள்ள விஷேட ஜனாதிபதி செயலணியின் கீழுள்ள மரக்கறி மற்றும் பழவகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பான துணைக் கமிட்டியின் ஊடாக தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் நடைமுறைகளைப் பலப்படுத்தும் வகையில் விஷேட செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொருளாதார மத்திய நிலையங்களில் திரளும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவும், புதுவருடத்தை நோக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த வேண்டியிருப்பதாலும் பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடு தொடர்பில் புதிய நடைமுறைகள் 05 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.

தம்புள்ள, தம்புத்தேகம, நுவரெலியா, கெப்பிட்டிபொல, அம்பிலிபிட்டிய பொருளாதார மையங்களின் செயற்பாடுகள் தொலைபேசி மற்றும் தொலைநகல்களினூடாக மட்டுமே நடைபெறும். வர்த்தகர்களுக்காக அவை திறக்கப்பட மாட்டா.

பிரதேச செயலகங்களுக்குள் தற்பொழுது செயற்படும் அத்தியாவசிய விநியோகம் தொடர்பான கமிட்டியினால் தமது பிரதேசங்களில் பதிவு செய்துள்ள மரக்கறி வியாபாரிகளுக்குத் தேவையான மரக்கறி மற்றும் பழவகைகளின் தொகையினை ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணிக்கு முன்னர் பொருளாதார மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும். குறித்த தொகை 7000 கிலோவை விட அதிகரிக்கலாகாது. ஓடர் செய்யப்படும் தொகை மற்றும் விலை தொடர்பில் பிரதேச செயலகமும் பொருளாதார மத்திய நிலையமும் இணக்கப்பாட்டுக்கு வரும். இணங்கிய தொகை மற்றும் விலையுடன் அன்றைய தினம் பி.ப.2.00 மணிக்கு முன்னர் ஓடரை உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் பொருளாதார மையம் பிரதேச சபைக்கு பொருட்களை விநியோகிக்கும்.வரும் லொறிகளில் இருந்து தமக்கான பொருட்களை வியாபாரிகளே இறக்கி எடுக்க வேண்டும். கிடைக்கப் பெற்ற பொருட்களின் தரம் தொடர்பில் பிரதேச சபையிடம் தெரிவிக்க முடியும்.

மேலதிக விபரங்களை 0113456225 என்ற இலக்கத்தினூடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here