போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

0
0

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க இந்தோனேசியா தயாராகிறது. சர்வதேச ரீதியாக குறித்த தண்டனையை இடைநிறுத்துமாறு பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. குறித்த தண்டனையை இடைநிறுத்துமாறு அவுஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள் விடுத்தள்ள நிலையில் இந்தோனேசியா குறித்த விடயத்தில் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
குறித்த குற்றத்தில் அவுஸ்திரேலியர்கள் இருவரும் அடங்குகின்றனர். விசாரணையில் நீதிபதிக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த 9 பேரும் இந்தோனேசியாவின் பாலி பகுதியில் 2005ஆம் ஆண்டு 8.3 கிலோ கிராம் ஹொரோயினோடு கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் அவுஸ்திரேலியர்கள். 9 பேரில் இருவர் மாத்திரமே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். அடுத்த ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 72 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் முடிந்ததும் தண்டனை நிறைவேற்றப்படலாம்.
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here