மதுவுக்கு அடிமையாகியுள்ள சிங்களவர்களைத் தட்டியெழுப்ப வேண்டும்

0
0

சிங்கள இனம் உறங்கிக் கிடக்கிறது. அதனை எழுப்பிவிடுவதற்காகத்தான் ஈஸ்டர் தாக்குதல் நடந்திருக்கிறது. கடந்த அரசின் காலத்தில் சிங்களவர்களுக்கு நன்றாகக் குடிக்கக் கொடுத்தார்கள். கிராமங்களில் கசிப்பை இல்லாமலாக்கி, மதுபானம் அருந்தக் கொடுத்தார்கள். ஒவ்வொரு நாளும் இரவு 8.00 ஆகும் பொழுது சிங்களவர்களில் 80%மானவர்கள் மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். இப்படியான ஒரு சமூகத்திற்கு முன்னேற முடியுமா என இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் பௌத்த பாலி பீட பேராசிரியர் பாத்தேகம ஞானிஸ்சர தேரர் தெரிவித்தார்.

ஹெல பொது ஹட இயக்கத்தை ஆரம்பித்து வைக்கும் மாநாடு கொழும்பில் நடைபெற்ற பொழுது அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய மாலைவன தர்மவிஜய தேரர் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கோ ஸஹ்ரானுக்கோ சிங்கள இனத்தைப் பயமுறுத்த முடியாது. ஏனைய இனங்கள் சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றபோது சிங்கள இனம் அதனை மலை போல உறுதியாக எதிர்த்து நின்றது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here