மனிதனின் தனிமையை போக்கி அரவணைத்து ஆறுதல் கூறும் ரோபோ விற்பனைக்கு

0
0
 – தமிழில் – மீயல்லை ஹரீஸ் –
Toyota மோட்டார் கம்பனி  ‘Kirobo Mini ‘ எனும் கையடக்க ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது . இது மனிதனின் தினசரி செயட்பாடுகளில் மனிதனுக்கு தோழமை வழங்கக் கூடிய வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் இறுதியியில் இவை சந்தைப் படுத்தப்பட உள்ளன .இந்த ரோபோ ¥ 39,800 யென் ($ 392) விலைக்கு விற்பனையாக உள்ளது. முதலில் டோயோட்டா நிறுவனத்தின்   தலைமையகத்தை சுற்றியுள்ள விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு செல்லும்.
Displaying 1475478965359.jpgKirobo என்றால் ஜப்பான் மொழியில் எதிர்பார்ப்பு ரோபோ என்று பொருள் படும். இது கண் சிமிட்டிக்கொண்டு கால்களை அசைத்தவாறே  அடிப்படை உரையாடல்களை செய்யக் கூடியது. எப்போதும் எமது கையில் எமக்கு துணையாக நின்று இதயத்தை தொடும் வகையில் உரையாடிக் கொண்டடே  தனது கடமையை நிறைவேற்றும் என்று  நிறுவனம் தெரிவித்துள்ளது.
Kirobo சிறுவர்களை மகிழ்விக்கும் திறனையும் பொழுதுபோக்குக்காக அரட்டை அடிக்கும்  திறனையும் மாணவர்களை ஆறுதல் படுத்தி உட்சாகம் ஊட்டும் திறனையும் கொண்டது எனவும் மனித உணர்வுகளை அடையாளம்  காணக்கூடியது என்றும்  நீங்கள் கவலையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அது உங்களது கண்களைப் பார்த்து   “நீங்கள்  ஏன் சோகமாக இருக்கிறீர்கள் ” என்று கேட்கும், அதே போல் நீங்கள் இதனுடன் ஒன்றாக வாழும் போது அதன் மீது  அன்பும், பாசமும் வளரும் என்றும்  நிறுவனம் கூறுகிறது.
Sources:
Displaying kirobo.JPG

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here