மனித வாழ்வு, பட்டினி, அரசியல்

0
0

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகம் இன்று கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது. ஆபிரிக்காவில் வறுமை காரணமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது. எமன், சோமாலியா, நைஜீரியா, தென் சூடான் போன்ற நாடுகளே பட்டினிச் சாவை கூடுதலாக எதிர்கொண்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுவதன் படி 20 மில்லியன் என்பது குறைந்ததொரு மதிப்பீடாகும். 2017ம் ஆண்டு முகம்கொடுத்துள்ள இவ்வனர்த்த நிலைமை 2018ஆம் ஆண்டாகும் பொழுது மேலும் உக்கிரமடையலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை இவ்வாறிருக்கையில் அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம் வெளிநாட்டு உதவித்தொகையை 29 வீதத்தால் குறைத்துவிட நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய பட்டினி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்காவினால் கிடைக்கப்பெறுகின்ற மனிதாபிமான உதவித்தொகைகள் அதிகரிக்கப்பட வேண்டியதற்கு பகரமான அது குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அவசர நிலைக்கு முன்பாக கடுமையான முறையில் வெளிநாட்டு உதவித்தொகையை துண்டித்துவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்கா சர்வதேச ரீதியில் எவ்வாறு தலைமைத்துவத்தை செலுத்த முடிகிறது என அமெரிக்க ரிபப்லிகன் கட்சி செனட் சபை உறுப்பினரான சேன் கிரகம் கேள்வி எழுப்பியிருந்தார்.

‘ஏனைய நாடுகள் இது விடயம் தொடர்பில் கூடுதல் பங்களிப்பை வழங்க வேண்டும்’ என்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் நெக் பிளர்சன் அதற்கு பதிலளித்திருந்தார். இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் டேவிட் வில்ஸ்லி ‘ஆறு மாத காலத்திற்குள் 6 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளதை நாம் பார்த்தோம். எதிர்வரும் வருடத்தில் இவ்வெண்ணிக்கை இரு மடங்காகலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பலம்பொருந்திய மனிதாபிமான உதவி நிறுவனத்தின் பிரதானி ‘இவர்கள் பொறுப்புடனேயே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு எந்தவொன்றையும் செய்ய முடியாமல் உள்ளது. இது தொடர்பில் உலக நாடுகள் அவதானம் செலுத்தாவிட்டால் இக்கடுமையான அனர்த்தம் குறித்த எதிர்வுகூறல் யதார்த்தமாய் போய்விடும்’ என தெரிவித்தார்.

உலகின் பலம்பொருந்திய 20 நாடுகளின் தலைவர்கள் ஜூலை 07- 08ஆம் திகதிகளில் ஹெம்பேர்க் நகரில் ஒன்றுகூடுகின்றார்கள். அம்மாநாட்டில் ஆபிரிக்க நெருக்கடி குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இவ்விடயம் குறித்து அங்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘இவ்வழிவுக்கு ஊழலும் யுத்தமுமே பொறுப்புச் சொல்ல வேண்டும். எமக்கு வேடிக்கை பார்க்க முடியாது. சமாதானம் உடனடியாக தேவைப்படுகின்றது. சமாதானம் கிட்டும் வரையில் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வழிவை தடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதை அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டும்’. என ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டம் மற்றும் உணவு விவசாயம் தொடர்பான நிறுவனங்களின் பிரதானிகளான வில்ஸ்மித், சில்வா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

பட்டினி தொடர்பான நெருக்கடி தற்பொழுது அகதிகள் தொடர்பான பிரச்சினையாக விருத்தியடைந்துள்ளது. பல மில்லியன் கணக்கான ஆபிரிக்க மக்கள் தற்பொழுது போர், மற்றும் பட்டியிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகிறார்கள். இப்பிரச்சினை தொடர்பில் உலக வல்லரசுகள் தலையிடா விட்டால் இந்நிலைமை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விருத்தியடையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

30 வருட கால யுத்தத்திற்கு முகங்கொடுத்த இலங்கைக்கு அது தொடர்பில் அலாதியானதொரு அனுபவம் உள்ளது. யுத்த நிலைமைக்கு வழிகோலுகின்ற அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் மற்றும் அவர்களது அடிவருடிகளின் ஆதிக்கம் தற்பொழுது அதிகரித்த வண்ணமுள்ளது. இது தொடர்பில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆபிரிக்க நெருக்கடி தொடர்பில் உலக செல்வந்த நாடுகள் அவசரமாக அவதானம் செலுத்த வேண்டும். அதற்கு எமது நாட்டின் தலைமைகள் தூண்டுகோளாக இருக்க வேண்டும். மறுபுறத்தில் எமது நாட்டில் இந்நிலைமை தலைதூக்காமல் இருப்பதற்கும் பொறுப்புவாய்ந்த அரசியல் தலைமைகள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Image may contain: 1 person, outdoor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here