மரக்கறிச் சந்தைகள் இயல்பு நிலைக்கு

0
0

கொரோனா பரவலால் கிருமி தொற்று நீக்கத்துக்காக மூடப்பட்டிருந்த நாராஹேன்பிட்ட வர்த்தக மத்திய நிலையம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

கொழும்பு மெனிங் மரக்கறிச் சந்தையும் நாளைய தினம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார். இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் அதிகாலை 4.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை கொழும்பு மெனிங் மரக்கறிச் சந்தை திறந்திருக்கும். மூடப்பட்டிருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி தொற்று அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here