மருத்துவத் துறையை தெரிவுசெய்யும் மாணவர்கள்

0
0

ஆகிப் ஸெய்ன்
வைத்தியராகுதல் அல்லது பொறியியலாளர் ஆகுதல் ஆகிய இரண்டு தொழின்மைகளே இலங் கைச் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்திற்குரிய தொழில்களாக கருதப்படுகின்றன. இந்தப் பாரம்பரிய மனப்பாங்கில் பெருமளவு மாற்றம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
பெற்றோர்கள் கனவாகவும் பிள்ளைகளின் உயர்ந்த எதிர்பார்ப்பாகவும் இவை இரண்டுமே உள்ளன. ஆயினும், எல்லோரும் இந்தக் கனவை மெய்ப் பிப்பதில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
மாணவர்களின் அல்லது தமது பிள்ளைகளின் ஆர்வத்திற்குரியதுறை எது? அவர்களது கொள்ளளவு என்ன? என்பதை யெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாத பெற்றேர்கள், சதாரண தர பெறுபேறுகளை வைத்தே தனது பிள்ளை வைத்தியராக வேண்டும் எனத் தீர்மானிக்கின்றனர்.
உயர் தரப் பெறுபறுகளைக் கண்டவுடன்தான் தமது தீர்மா னம் பிழையானது என்பதைப் புரிந்துகொள்வது காலம் கடந்த ஞானம் ஆகும். ஆக, பிள்ளைக ளின் ஆற்றல், ஆர்வம், விருப்பு- வெறுப்பு என்பவற்றுக்கும் பெற்றோர் இடம்தர வேண்டும். அவர்களுடன் ஆலோசனை நடத்தியே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.
ஏனைய துறைகள் போன்று மருத்துவத் துறைக்குத் தெரிவாகும் மாணவர்களின் தொகை உயர்வாக இல்லாமல் இருப்ப தற்கு அரசாங்கத் தரப்பிலும் சில காரணங்கள் உள்ளன. பிற துறைகளோடு ஒப்பிடும்போது உயர் தர விஞ்ஞானத்தில் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானதே. இதனால், பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களின் தொகையும் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே உள்ளது.
2012 ஆம் ஆண்டில் பல்கலை அனுமதி பெற்ற மாணவர்களில் 27.1%மானோர் வணிகத்துறையைச் சாந்தவர்கள். 50%மானோர் கலைத்துறையைச் சார்ந்தவர்கள். 22%மானோர் மருத்துவ, பொறியியல் துறையைச் சார்ந்தவர்கள். இதிலும் ஒரு அரை வாசிப் பேர்தான் மருத்துவத்துறைக்குத் தெரிவாகின்றனர்.
இன்னொரு புறம் மருத்துவத் துறைக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்ச்சு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, வணிகத் துறையை மேம்படுத்தவே முயற் சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் வருடாந்தம் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்ற குறைபாட்டை வேறு இரு காரணிகள் நிவர்த்தித்து வருகின்றன.

  1. இலங்கையில் 6000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் செயல்படுகின்றனர்.
  2. வெளிநாட்டில் மருத்துவத்தைக் கற்றவர்களும் இலங்கை வைத்தியசாலைகளில் மருத்து வராகப் பணியாற்ற அனுமதிக் கப்படுகின்றனர்.

இலங்கையில் செயல்படும் போலி மருத்துவர்களின் எண் ணிக்கை சுமார் 25,000 பேர் என டெய்லி மிரர் ஆங்கிலப்பத்திரி கையின் ஆசிரியர் தலைப்பு எழுதியிருந்தது.
எனினும், ”காதார அமைச் சின் அறிக்கையின் படி 6000 பேர் மட்டுமே இவ்வாறு தகுதியான சான்றிதழ்கள் இன்றி போலிகளாக இயங்குகின்றனர். இவர் களைக் கண்டுபிடித்து சட்டத் தின் முன்நிறுத்துவதற்கு அரச மருத்துவக்கழகம் ஒரு திட்டத் தை நடைமுறைப்படுத்தி வரு கின்றது.
எவ்வாறாயினும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவத் துறைக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானதாகும். விளைவாகவே, மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த இடைவெளியை நிரப்பும் முனைப்பிலும் இத்தகைய தொழில்சார் தகைமையை வழங்குவதினூடாக பெருமளவு வருமானத்தைத் திரட்டலாம் என்ற நோக்கிலும் இன்று இலங்கையில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மருத்துவக் கற்கைகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இதில் PATHE நிறுவனம் முதன்மையானது. PATHE என்பதும் ஒரு கல்வி அச்சு (Educational Hub) என்பதில் சந்தேகமில்லை.
மூன்றாம் நிலை மற்றும் உயர் கல்விக்கான மக்கள் அகடமி (People’s Academy for tertiary and higher Education) ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா ஆகிய மேற்கு நாடுகளின் முன்னணிப் பல்கலைக்கழகங்களது மருத்துவ பீடங்களோடு இணைந்து இது மருத்துவக்கற்கைகளை வழங்குகின் றது. ஆயினும், மாணவர்கள் பாடநெறியை கொழும்பில் பெறமுடியாது.
மருத்துவம் பரிசோதனை கூடத்துடன் தொடர்பானது என்ற வகையில் குறிப்பிட்ட நாடுகளுக்கே செல்ல வேண்டும். மேற்கு நாடுகளில் மருத்துவம் கற்பது செலவு மிக்கது என்ப தையும் மறந்து விடக் கூடாது. ஆனால், மலேசியா, நேபாளம் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சென்று இலங்கை மாணவர்கள் மருத்துவர் ஆகலாம். அதற்கான வாய்ப்பையும் PATHE தருகின்றது.
PATHE ஐ உலக சுகாதார அமையம் (WHO), ஆசிய மருத்துவக் கழகம் (AMC), இலங்கை மருத்துவக் கழகம் (SLMC), அமெரிக்காவின் மருத்துவக்கழகம் (ECFMG) என்பவை அங்கீகரித் துள்ளன. எனினும், பிலிப்பை ன்ஸ், பாகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளிலோ, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளிலோ மருத்துவக் கற்கையைப் பூர்த்தி செய்து நாடு திரும்பும் மாண வர்கள் இலங்கை மருத்துவ சபையினால் நடத்தப்படும் ERPM பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
இது இலங்கையில் மருத்து வராகப் பணியாற்றுவதற்கான கட்டாய நிபந்தனையாகும். தற்போது இலங்கை மருத்துவ சபை ERPM பரீட்சைக்கு மேலதிக வேறு சில தகுதிகளையும் கோருகிறது. அவற்றையும் ஒருவர் பூர்த்தி செய்ய வண் டும்.
இலங்கைப் பல்கலைக்கழகங் களுக்கு Z Score முறையில் தேவைப்படும் புள்ளிகளைப் பெறாமல் நுழைவு வாய்ப்பை இழக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நாடுகளில் மருத்துவக் கற்கைகளைப் பூரணத்துவப் படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here