மஸ்ஜிதுல் அக்ஸா மீது தொடரும் அத்துமீறல்

0
2

மஸ்ஜிதுல் அக்ஸா மீது மேற்கொள்ளப்படும் தொடர்ந்தேர்ச்சியான அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து துருக்கியின் உம்மத் வக்ஃபி என்ற இணையத்தளம் பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. அத்தகவல்களின் படி மஸ்ஜிதுல் அக்ஸாவின் கீழால் 120 சுரங்கங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன. மாதாந்தம் சுமார் 100 அத்துமீறல்கள் அங்கு இடம்பெறுகின்றன.

900 கமராக்கள் பழைய குத்ஸ் நகரை கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ளன. பழைய குத்ஸ் நகரின் 80 இடங்களில் யூதக் குடியேற்ற அபாயங்கள் உள்ளன. 5,500 இற்கும் மேற்பட்ட அசையா சொத்துக்கள் தகர்க்கப்படும் அபாயம் உள்ளது. குத்ஸ் மக்களில் 80% ஐ தாண்டிய மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என அந்த பட்டியல் கூறுகின்றது.

Related image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here