மாகாண எல்லை நிர்ணயம் : விவாதிப்பதற்கான திகதி தீர்மானிப்பதில் இழுபறி

0
0

மாகாண எல்லை நிர்ணயம் : விவாதிப்பதற்கான திகதி தீர்மானிப்பதில் இழுபறி

பழைய முறையின் கீழோ அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலோ அரசாங்கம் ஒருபோதும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தமாட்டாது எனவும், ஆனால் 1988 இன் மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்குத் தயாராக இருப்பதாகவும் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். புதிய முறையில் தேர்தல் நடத்துவது என்பது 2015 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எனவும் அவர் நினைவுபடுத்தினார்.

சப்ரகமுவ, வட மத்தி, கிழக்கு மாகாணத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் நான் புத்தாண்டுக்கு முன்னர் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். பழைய முறையில் தேர்தல் வைக்கப்பட வேண்டும் என்ற கருத்து அப்போது முன்வைக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஜேவிபியும் சில சிறுபான்மைக் கட்சிகளும் அந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட, வந்திருந்தவர்கள் அனைவரும் 1988 இன் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு இணங்கினார்கள். இந்த வகையில் இந்த மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருந்த போதிலும் மாகாண எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் புதிய முறையில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இந்த அறிக்கை பெப்ரவரி 19 இல் சமர்ப்பிக்கப்பட்ட போதும் , இது ஒரு மாத காலத்தில் பாராளுமன்றத்தில் வாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். ஆனாலும் இந்த விவாதத்துக்கான தினமொன்றை வரையறுத்துக் கொள்வதில் கட்சித் தலைவர்கள் இதுவரை ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை என்பதனால் இந்த அறிக்கை மீதான விவாதம் தள்ளிப் போடப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here