மீண்டும் ஹஸீனா

0
2

டிசம்பர் தேர்தலை அடுத்து கடந்த வாரம் ஷேக் ஹஸீனா நான்காவது முறையாக பங்களாதேஷின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை ஊழலும் மோசடியும் நிறைந்தது என்று குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே 71 வயதான ஹஸீனா தெற்காசியாவிலுள்ள 165 மில்லியன் மக்களின் தலைவியாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

ஹஸீனா பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தியவர் என்று அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் எக்களிக்கின்றபோது, அவர் ஒரு சர்வதிகாரி என்று எதிர்க்கட்சிகளும் இஸ்லாமியவாதிகளும் அவரைச் சாடுகின்றனர்.

டிசம்பர் 30 இல் நடந்த தேர்தலில், 300 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் அவாமி லீக் கட்சியும் அதனோடு இணைந்த ஏனைய கூட்டுக் கட்சிகளும் சேர்ந்து 288 ஆசனங்களைக் கைப் பற்றியுள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் கிடைத்த மொத்த ஆசனங்கள் வெறும் 07 ஆகும். இந்த சமநிலை இன்மை ஹஸீனாவின் ஊழலையும் தேர்தல் மோசடியையும் புரிந்து கொள்ளப் போதுமானது என்கின்றன எதிர்க்கட்சிகள்.

தேர்தலுக்கு முன்பாக நடுநிலையான பல அரசியல் செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். பங்களாதேஷ் தேசிய கட்சி (BNP) தலைவியும் முன்னாள் பிரதமருமான பேகம் காலிதாஸியா தேர்தலில் குதிக்க முடியாது என்று தேர்தலுக்கு முன்பாகவே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது மிகப் பெரிய ஜனநாயக விரோதத் தீர்ப்பு மட்டுமன்றி, நீதித் துறையின் சுயாதீனத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்ற ஒன்றாகும்.

டிசம்பர் 30 தேர்தல் அன்று இடம்பெற்ற வன்முறைகளில் 17 பேர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் ஒழுங்கீனங்கள் குறித்து விசாரணை செய்யு மாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் காலங்களின் போது இடம் பெற்ற வன்முறைகள், ஆள் மாறாட்டம், வாக்கு மோசடி குறித்து நம்பகமான அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபை தேர்தல் காலங்களில் இடம்பெற்ற அரச தரப்பு வன்முறைகளை கடுமையாகச் சாடியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இடம்பெற்ற தனிநபர்கள் மீதான தாக்குதல்கள், தான்தோன்றித்தனமான கைதுகள், பலர் காணாமல் போனமை, முக்கிய நபர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமை என்பன தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து ஹஸீனாவின் அவாமி லீக் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்கள் என  ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

வெற்றி பெற்ற 7 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்துள்ளதோடு, தேர்தல் மீளவும் நடாத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அவாமி லீக் ஆதரவாளர் களுக்கு ஷேக் ஹஸீனா ‘மனிதாபிமானத்தின் தாய். பல பத்தாயிரம் ரோஹிங்ய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியவர். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கோ அவர் ஒரு ஊழல் பேர்வழி மிக்க சர்வதி காரி. அரசியல் இலாபத்திற்காக காலிதாஸியா வையும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் அடைத்த கொடுங்கோலர். பத்திரிகை சுதந்திரத் திற்கு எதிராக அவர் கொண்டு வந்த சட்டம் ஜனநாயக விரோதமானது.

1975 ஆகஸ்டில் சில இராணுவ அதிகாரிகள் அவரது தந்தையும் பங்களாதேஷின் முதல் ஜனாதிபதியுமான ஷேக் முஜீபுர் ரஹ்மான் அவரது மனைவி மற்றும் 3 மகன்மார்களைக் கொலை செய்ததை அடுத்து ஹஸீனா வெளிநாட்டில் தங்கியிருந்தார். 1981 இல் பங்களாதேஷ் திரும்பிய ஹஸீனா அவாமி லீக் கட்சியின் தலைமைத் துவத்தை ஏற்றதோடு, பங்களாதேஷ் மக்களின் அபிமானத் தலைவியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இராணுவச் சர்வதிகாரியான ஹுஸைன் முஹம்மத் இர்ஷாதை 1990 இல் பதவி கவிழ்ப்ப தற்கு பேகம் காலிதாஸியாவுடன் ஹஸீனா ஒன்றிணைந்தார். ஆனால், ஹுஸைன் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் இருவருக்கும் இடை யிலான அரசியல் பகைமை வெடிக்கத் தொடங்கியது.

நடைபெற்ற தேர்தலில் ஷேய் ஹஸீனா தலைமையிலான மாபெரும் கூட்டணியில் அவாமி லீக், ஜாதிய கட்சி (இர்ஷாத்), பங்களாதேஷ் தொழிலாளர் கட்சி, ஜாதிய சமைத்தன்ரிக் தால் கட்சி, விகல்ப தாரா பங்களாதேஷ், ஜாதிய கட்சி (மனியூ), பங்களாதேஷ் தரீக்கத் பெட ரேஷன், பங்களாதேஷ் தேசிய முன்னணி என்பன இடம்பெற்றன.

பங்களாதேஷ் தேசிய கட்சியின் தலைவர் கமால் ஹுஸைனின் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியில் 16 கட்சிகள் அங்கத்துவம் வகித்திருந்தன. இவற்றுள் பங்களாதேஷ் ஜமாஅத்தே இஸ்லாமியும் ஒன்றாகும். மூன்றாவது கூட்டணியான இடதுசாரி ஜன நாயகக் கூட்டணியில் ஐந்து இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here