மீராவோடை தாக்குதல்: ஷீஆ சுன்னி மோதலா ?

0
0

ஓட்டமாவடி மீராவோடையில் இயங்கிவரும் ஷீஆக்களின் இஸ்லாமிய கலாச்சார நிலையம் தாக்கப்பட்டமை இலங்கையில் இருக்கும் ஷீஆ சுன்னி மோதலின் விளைவே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஷீஆ சுன்னி மோதலொன்று தொடர்பில் அண்மைக்காலமாக பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிறியதொரு சம்பவத்தையும் ஷீஆ சுன்னி மோதலாகக் காட்டி சிரியாவில் போன்ற குழுச்சண்டைகள் இலங்கையில் வரவிருப்பதாக அண்மைக்காலமாக ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து வருகின்றன.

ஓட்டமாவடிப் பகுதியில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இந்த ஷீஆ மத்திய நிலையம் இயங்கி வந்துள்ளது. கடந்த வருடம் ஓட்டமாவடி ஜம்இய்யதுல் உலமா எடுத்த முடிவின்படி அதானுக்காகவன்றி எந்தப் பள்ளிவாசலும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாதென அறிவித்திருந்தது. ஆனாலும் பெரும்பாலான பள்ளிவாசல்கள் இதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் குறித்த ஷீஆ இஸ்லாமிய கலாச்சார நிலையமும் ரமழான் காலங்களில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை பாவித்து வந்துள்ளது. இதனைப் பொறுக்க முடியாத சில இளைஞர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது.

ஓட்டமாவடியில் கலாசாலையை தாக்கிய நால்வர் கைது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here