முசலிப் பிரதேசத்தில் சுகாதார போசாக்கு உணவுக் கண்காட்சி

0
0

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு (மன்னார்) முசலி சுகாதார வைத்திய வைத்திய அதிகாரி அலுவலகம் தேசிய போசாக்கு வாரத்தை முன்னிட்டு கண்காட்சி நிகழ்வொன்றை  நேற்று புதன்கிழமை (24.06.2015) சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஒஸ்மன் சார்ல்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார்ப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி அன்ரன் சிசில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் வடமாகாண சுகாதார போசாக்கு உத்தியோகத்தர் கே.சுதர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் போசாக்கு உணவுகளின் வகைகள், அதன் முக்கியத்துவம் என்பன குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், பிராந்திய மக்களால் உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், விதை வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிராந்திய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Musali MOH 5 Musali MOH 1 Musali MOH 2 Musali MOH 4 Musali MOH 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here