முடிவுக்கு வந்தது ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு

0
2

முடிவுக்கு வந்தது ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று (12) காலை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளை அடுத்து, தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்ததாக ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் பீ.எம்.பீ. பீரிஸ் கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித்த சேனாரத்ன, சரத் அமுனகம ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, அனைத்து ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here