முன்னாள் இராணுவ வீரர்கள் மீளவும் படையணிகளில் இணைப்பு

0
0

இலங்கை இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரர்கள் அனைவரையும் இராணுவத்திலுள்ள அனைத்து படையணிகளிலும் இணைப்பதற்கு இராணுவ தலைமையகத்திலுள்ள பதவிநிலை கடமைகள் பணியகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து படையணி தலைமையகங்களிலுமுள்ள நிர்வாகக் கிளையினரின் கண்காணிப்பின் கீழ் இவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பில் பதவிநிலை கடமைகள் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்தன விஜயசுந்தர தலைமையில் அனைத்து படையணிகளிலுமுள்ள மத்திய கட்டளைத் தளபதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், இராணுவத்திலிருந்த விஷேட தேவையுடைய முன்னாள் படைவீரர்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக் கருவுக்கமைய இராணுவ வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here