முன்னாள் சட்டத்தரணி சவூதி அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்

0
0

சவூதியின் முன்னாள் சட்டத்தரணியும் சட்டத்துறை ஆலோசகருமான முஹம்மத் அல் மிஷைல் அல் கஹ்தானி சவூதி அரசாங்கத்திற்கும் அதன் கொள்கைகளுக்கு தான் எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். யூடியுப் ஒளிநாடாவில் தோன்றிய கஹ்தானி, சவூதி அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கைகளும் சவூதி குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதும் மோசமான நிலைக்குச் செல்லும் வறுமையும் நாடு முழுவதிலும் நீடிக்கும் வேலையில்லாப் பிரச்சினையுமே தனது எதிர்ப்புக்கான காரணம் என்று விளக்கியுள்ளார்.

தற்போது கஹ்தானி பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாழ்கிறார். சவூதி அரசாங்கத்தை எதிர்க்கின்ற அனைவரோடும் ஒத்துழைத்துச் செல்ல தான் தயார் என்று அறிவித்துள்ள கஹ்தானி, சவூதியின் இன்றைய ஆட்சி சர்வதிகாரமும் ஊழலும் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார்.

புத்திஜீவிகளையும் ஆலிம்களையும் கைதுசெய்து சித்திரவதை செய்யும் நிலைமைக்கு சவூதி அரசாங்கம் வந்துள்ளதை கஹ்தானி கண்டித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here