முஸ்லிம்களிடம் பெருகி வரும் தொற்றா நோய்கள்

0
2

இலங்கை மக்களை பொதுவாகத் தாக்கும் தொற்றா நோய்களில் குடற்புண் (ulcer) ஒற்றைத் தலைவலி, இதய நோய் மற்றும் சக்கரை வியாதி என்பவை குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் இதய நோய்களால்-குறிப்பாக மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களின் தொகை ஒப்பீட்டு ரீதியில் அதிகமாகும். இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் இவ்வகை தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்துச் செல்வதை ஆய்வுகளும் புள்ளிவிபரங்களும் காட்டுகின்றன.

இதில் எண்ணிக்கையில் அநேகரைப் பாதித்துள்ள நோயாக குடற்புண் சுட்டிக் காட்டப்படுகின்றது. உணவுக் குழாய், சிறு குடல், முன்குடல் போன்றவற்றின் உட்பாகம் பாதிக்கப்பட்டு புண்கள் ஏற்படுவதையே வயிற்றுப் புண் அல்லது குடற்புண் என அழைக்கப்படுகின்றது. இதற்கு மருத்துவக் காரணங்களும் உளவியல் காரணங்களும் உள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து சர்வதேச அளவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் ஹெலி, கோபாக்டர் பைலோரா எனப்படும் பக்டீரியாக்களால்தான் புண்கள் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக முன்குடலில் இவ்வகை பக்டீரியாக்கள் புண்களை ஏற்படுத்துவதாக இவ்வாய்வுகள் கூறுகின்றன. மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படலாம் என்ற ஒரு கருத்து உள்ளது. சில உள மருத்துவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். பெரும்பாலான உடல் நோய்களுக்கு மனஅழுத்தமே பிரதான காரணம் என்ற வகையில், வயிற்றுப் புண்ணுக்கும் மனஅழுத்தத்திற்கும் இடையில் தொடர்புள்ளதாக இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இன்றைய உடல் மருத்துவர்கள் இக்கருத்தை நிரூபிக்க முடியாதுள்ளது எனக் கூறுகின்றனர். உணவு மாறுபாடுகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், எஸ்பிரின் அல்லது அது போன்று மருந்துகள் கூட வயிற்றுப் புண்ணுக்குக் காரணமாகலாம். பெரசிடமோல், எஸ்பிரின், புரூஃபன் போன்ற வலி நீக்கிகளை (pain killer) அதிகம் பயன்படுத்துவதும் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தலாம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.

நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் மென்பானங்களை அருந்தும் பழக்கம் இன்று பரவலாக அதிகரித்துள்ளது. அத்தகைய மென்பானங்களும் வயிற்றுப் புண் உருவாவதில் பங்களிக்கின்றன. வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைத்திருப்பதும் இந்நோய் ஏற்படுவதற்குச் சாதகமாக அமைகின்றது. கடும் வேலை, பணிச் சோலிகள், நேரமின்மை போன்ற இன்னோரன்ன காரணிகளால் உணவை தகுந்த நேரத்திற்கு உள்ளெடுக்காமல் பலர் உணவைத் தாமதப்படுத்துகின்றனர். இதுவும் வயிற்றில் புண்கள் உருவாவதற்குப் பிரதான காரணமாகும். உணவை அடிக்கடி உண்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.

இதேபோன்று முஸ்லிம்களின் உணவுப் பழக்கத்திலுள்ள கொழுப்பு நிறைந்த உணவுகளின் தாக்கம், மசாலா வகைகளை அதிகமாகச் சேர்த்தல் என்பதும் இத்தகைய நிலைமைகளை உருவாக்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here