முஸ்லிம்களை ஒதுக்கிவிட்டு எமது இலக்கை அடைய முடியாது

0
0

மூன்றிலிரண்டு பெரும்பான்மை எனும் எமது இலக்கை அடைவதற்கு மூவின மக்களதும் ஆதரவை நாம் நிச்சயம் பெற வேண்டும். எனவே தேர்தல் பரப்புரைகளில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இலக்காகக் கொண்டு தான் எமது தேர்தல் பிரச்சாரங்கள் அமைய வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கின்றனர். இப்படியான கருத்துக்களை வெளியிடுவதை நாங்கள் தவிர்க்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான தமிழ் முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்துக்காக பொதுத் தேர்தலில் அவர்களை ஒதுக்கிவைத்துப் பரப்புரைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here