முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த அறிக்கை ஒரு பக்கச் சார்பானதா ?

0
2

கடந்த 9 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்துக்கான அறிக்கை தற்போது நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கையின் நம்பகத் தன்மை தொடர்பில் பலவேறு மட்டங்களிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிவதற்காக நீதியரசர் ஸலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கைக்கு மேலதிகமாக பெரும்பான்மை ஒப்புதல்களுடன் கூடிய மற்றுமொரு அறிக்கை அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே இந்தக் குழுவில் 16 பேர் உள்ளடங்கியிருந்த நிலையில் 9 பேர் ஜம்மியதுல் உலமா சார்பான அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர். கடைசியாக நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் நீதியரசர் ஸலீம் மர்சூப் சார்பான குழுவினரும் 09 கையெழுத்துக்களுடன் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

எனினும் நீதியமைச்சர் தலதா அதுகோரளவிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கையில் ஜம்மியதுல் உலமா சார்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் இருந்த விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. அத்தோடு கூட்டங்களுக்கே சமுகமளிக்காத இருவரும், குழுவில் உத்தியோகபூர்வமாக அங்கம் வகிக்காத ஒருவரும் நீதியரசர் ஸலீம் மர்சூப் சார்பான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

தவிரவும் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை குழுவில் போதுமான அங்கத்தவர்களுக்கு வாசித்துக் காட்டப்படவில்லை என்றும், அறிக்கையைக் கையளிப்பதற்கும் குழுவில் பலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் குழுவில் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனாலும் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் தினத்தில் சில முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் கைச்சாத்தான அறிக்கையில், சிப்லி அஸீஸ் PC, பாயிஸ் முஸ்தபா PC, முன்னாள் நீதிபதி அப்துஸ் ஸலாம், நீதிபதி மக்கி மொஹமட், சட்டத்தரணி பஸ்லத் சஹாப்தீன், அஷ். ரிஸ்வி முப்தி, அஷ். முபாரக் மதனி, கலாநிதி எம்.ஏ.எம. சுக்ரி, சட்டத்தரணி நத்வி பஹாஉதீன் ஆகியோர் அடங்குகின்றனர்.

ஒன்பது வருட முயற்சிக்குப் பின்னரும் ஒரு தீர்வினை எட்டாத நிலையிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் சமூகம் வெட்கிக்க வேண்டியதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here