மேற்குக்கரை மிக விரைவில் இஸ்ரேலுடன் இணைக்கப்படும்

0
0

கிட்டிய எதிர்காலத்தில் மேற்குக்கரை முழுவதும் இஸ்ரேலின் சட்டரீதியான பிராந்தியமாக இணைத்துக் கொள்ளப்படும் என இஸ்ரேலின் கல்வியமைச்சர் நப்டலி பெனட் தெரிவித்துள்ளார். மேற்குக்கரையிலுள்ள 15 அறபு முஸ்லிம்களின் வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படையினருக்கு பதிலளிக்கையிலேயே பெனட் இவ்வாறு கூறினார். இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக்கரையில் புதிய குடியேற்றத் திட்டங்களை அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பெத்லஹெமின் மேற்குப் புறமாகக் உள்ள அல் காதர் நகரத்தில் அமைந்துள்ள பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான 15 வீடுகளை கடந்த வாரம் இஸ்ரேலிய இராணுவம் தரைமட்டமாக்கியது. மேற்குக்கரையில் தொடர்ச்சியான சட்டவிரோதக் குடியேற்றத் திட்டங்களை இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

2018 மார்ச் 08 ஆம் திகதி இஸ்ரேலிய நீதிமன்றம் பலஸ்தீனர்களின் வீடுகளை உடைப்பதற்கு அனுமதி வழங்கியது. ஆனால், சர்வதேச சட்டத்தின் கீழ் கிழக்கு ஜெரூசலத்திலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையிலும் இஸ்ரேல் ஸ்தாபித்துள்ள குடியேற்றத் திட்டங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here