யாழ்ப்பாண வாகண விபத்தில் இருவர் பலி

0
1

(பைஷல் இஸ்மாயில்)
இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வாகண விபத்தில் இருவர் மரணித்துள்ளனர். ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மரக்கறிவகைகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு செல்வதற்காக ஏ9 பாதை வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வீதியின் அருகே நின்ற மரம் ஒன்றுடன் மோதுண்டு பாரிய விபத்துக்குள்ளானது.
பளை பிரதேசதில் மருதங்கேணி, புதுக்காடு என்ற இரண்டு கிராமத்திற்கும் மத்தியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவத்தில் லொறியில் பயனித்த இருவர் பலியானார்கள்.
லொறியின் உரிமையாளர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வேலையில் உயிரிழந்தார் மற்றுமொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Accident in Jaffna 5 Accident in Jaffna 2 Accident in Jaffna 3 Accident in Jaffna 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here