யெமன் நெருக்கடிக்கு தவக்குல் கர்மானின் தீர்வுத் திட்டம்

0
1

யெமனில் நீடிக்கும் தேசிய அரசியல் நெருக்கடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தவக்குல் கர்மான் சமாதானத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார். நிலைமாறும் அரசுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கும், போரில் கலந்து கொள்ளாத அனைத்துத் தரப்பினருக்கும் அரசியல் பங்கேற்பு உரிமையை வழங்குவதற்கும் அவரது யோசனைத் திட்டம் முன்னுரிமை வழங்குகின்றது.

“நான் ஒரு பிரஜை என்ற வகையில் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, எனது நாட்டில் சமாதானத்தை உறுதி செய்யும் வகையில் இந்தத் தீர்வுத் திட்டத்தை முன்மொழிகின்றேன்” என அவர் குறிப்பிட்டார்.

“நாம் ஒரு சர்வதிகார ஆட்சியாளரை தூக்கியெறிந்தோம். ஒரு நிலை மாறும் அரசாங்கத்தை உருவாக்கினோம். ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்குத் தொடங்கினோம். எனினும், ஹூதிகள் மேற்கொண்ட இராணுவப் புரட்சி அனைத்தையும் குழப்பிவிட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here