ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொள்ளும் எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும் ஐ.ம.சு.ம கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் – ஐ.ம.சு.ம.கூ. தீர்மானம்

0
0

ரஞ்சன் ராமநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை என அக்கட்சி தீர்மானித்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அன்றைய தினம் விவாதத்தில் கலந்து கொள்ளவிருந்த ரோஹித்த அபேகுணவர்தன மீதான அச்சத்தில் ரஞ்சன் தனது தங்க ஆபரணங்களை ஒழித்து வைத்துக்கொண்டுள்ளார்.
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன அதில் பங்கேற்கமாட்டார் என தெரியவந்ததும் ரஞ்சன் ராமநாயக்க அவ்விவாதத்திற்கிடையில் மீண்டும் தனது மோதிரம் மற்றும் தங்கச்சங்கிலியை கேட்டுப் பெற்று அணிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான் உண்மையிலேயே ரோஹித்த அபேகுணவர்தன வருவதினாலேயே தங்கச்சங்கிலியை கழற்றி வைத்து விட்டு வந்தேன்.
நான் உண்மையில் அச்சத்துடனயே வந்தேன். ஏனெனில் ரயில்களில் சங்கிலிகளை பறித்து கொள்வார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here