ரஷ்யா, அமெரிக்காவை ஆச்சர்யப்படுத்தும் துருக்கியின் இன்னுமொரு தயாரிப்பு

2
0

turkish_koral_system_220216_03(வீடியோ இணைப்பு) சிரியாவின் எல்லைப் புறங்களில் துருக்கி நிறுத்தியிருக்கும் ராடார்களை சீர்குழைக்கும் முறைமையினால், ரஷ்யாவும் அமெரிக்காவும் இரவு நேரங்களில் விமானங்கள் பறப்பதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கியத் தயாரிப்பான ‘கவறால்’ எனப்படும் இம்முறைமையினால் ரஷ்ய பாதுகாப்பு முறைமைகளையும் அதன் யுத்த விமானங்களையும் சீர்குழைக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இவை ராடார்களையும், ஏவுகணைகளின் இயக்கத்தையும், பீரங்கிக் குண்டுகளையும் 100 கிலோமீற்றர் தொலைவிலிருந்து சீர்குழைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய மூலோபாய பகுப்பாய்வாளர் பிஸ்தன்தீன் ஸைபூஃகூஃப், ரஷ்யாவின் எஸ் 100 ஏவுகணை முறைமைகளையும், பிராந்தியத்திலுள்ள அனைத்து இராணவ முறைமைகளையும் சீர்குழைக்கும் ஆற்றல் கொண்ட இம்முறைமை எம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைப் பயன்படுத்துவதிலிருந்து துருக்கியை தடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

2 COMMENTS

  1. இது முன்னேறிவரும் துருக்கியை மட்டம் தட்டுவதறகு அமெரிக்காவின் கபட நாடகம். இதனை சாட்டாக வைத்து.( ஈராக்.லிபியா.சூர்யா. நாடுகளுக்கு செய்தன போன்று) துருக்கி நாட்டுக்கும் செய்யப்போபிறந்து என்று என் மனம். சொல்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here