ரிஷாத் தமக்கு வேண்டாமென்கிறார் கெஹெலிய

0
9

20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும் ரிஷாத் பதியுதீன் தமது கட்சியுடன் இணைவதை தான் எதிர்ப்பதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு நாம் 225 பேருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு அளிப்பது தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அவரது மனச்சாட்சிக்கிணங்க செயற்படட்டும். ஆனால் எங்களது கட்சியில் அவரை இணைக்க வேண்டியதில்லை என்ற கருத்திலேயே நான் இருக்கிறேன். ஏனெனில் அவர் தொடர்பில் தற்பொழுது பல சிக்கல்கள் இருக்கின்றன எனத் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவது தொடர்பான கதையாடல்கள் நடைபெற்று வரும் வேளையில் வவுனியா மாவட்ட அலுவலகத்தின் கேட்போர் கூடத் திறப்பு விழாவில் அவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் இணைந்து கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் தற்போதைய அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என தனது முகப்புத்தக பக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிவு ஒன்றையிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here