ரோஹிங்கியாவில் கப்பலேறும் முஸ்லிம் நாடுகளின் மானம்

0
0

 – லத்தீப் பாரூக் –

மியன்மாரில் றோஹிங்யா முஸ்லிம்கள் இனரீதியாகச் சுத்திகரிப்புசெய்யப்பட்டு வருவதன் மூலம் முஸ்லிம் உலகின் அரசியல், இராணுவ, கலாசாரமற்றும் சமயரீதியான வங்குரோத்து நிலை வெளிப்பட்டுள்ளது. மிகவும் கவலைஅளிக்கத் தக்கவிதததில் முஸ்லிம் உலகம் றோஹிங்யா முஸ்லிம்களைக் காப்பாற்றத் தவறியுள்ளமையே இதற்கு காரணம். அந்த அப்பாவி மக்கள் மீது இராணுவமும் காவி உடை தரித்த காடையர் குழுவினரும்; கட்டவிழ்த்து விட்டுள்ள காட்டுமிராண்டித் தனம் காரணமாக இன்னமும் அந்த மக்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் அதைக் கண்டிப்பதிலும் முஸ்லிம் அல்லாத உலகநாடுகள் முன்னணியில் உள்ளன. 2017 ஆகஸ்ட் 25 முதல் இந்த காட்டுமிராண்டித் தாக்குதல்கள் மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம் உலகின் சிவில் சமூகங்கள் மட்டுமே இதற்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியுள்ளன. அரசாங்கங்களோ எந்த வித்தியாசமும் இன்றி வெட்கக் கேடான விதத்தில் அமைதி காக்கின்றன.

இந்த சம்பவம் இடம்பெறத் தொடங்கி 48 மணிநேரத்தில் அதைக் கண்டித்த முதலாவது உலகத் தலைவர் பரிசுத்த பாப்பரசராவார். மியன்மார் இராணுவத்தால் முஸ்லிம்கள் துஷ்யிரயோகம் செய்யப்படுவதாகவும் கொல்லப்படுவதாகவும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அவர் பகிரங்கமாகச் சாடினார்.ஐக்கியநாடுகள் சiபின் அறிக்கைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைகள் என்பனறோஹிங்யாமக்கள் எதிர்நோக்கவுள்ள ஆபத்தை முன்கூட்டியே அறிவிப்பதாய் அமைந்திருந்தன. நாடற்ற,உரிமைகள் அற்ற ஒரு சமூகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த அநீதியான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர மிக உறுதியான அரசியல் நடவடிக்கைகள் சர்வதேச ரீதியாகத் தேவைப்படுகின்றன.

புத்தபிரான் இன்றைய காலகட்டத்தில் இருந்திருந்தால் றோஹிங்யா முஸ்லிம்களுக்குத் தான் உதவியிருப்பார். காரணம் அந்த மக்கள் இன்று மிகவும் அநீதி இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகக் காணப்படுகின்றனர் என்று கௌரவத்துக்குரிய சர்வதேச கீர்த்தி பெற்ற பௌத்தமத குரு தலாய்லாமா தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இந்த சிறுபான்மை இன மக்களின் நிலை தன்னை மிகவும் கவலைக்கு ஆளாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களை இவ்வாறு கொடுமை படுத்துகின்றவர்கள் உண்மையில் புத்தரை நினைப்பவர்களாகவும் பின்பற்றுபவர்களாகவும் இருந்தால் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளவும் மாட்டார்கள் என்றும் தலாய்லாமா தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் சமாதானத்துக்கான நோபள் பரிசு வென்றவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஆங்சோங் சூகியை சந்தித்தபோது றோஹிங்யா மக்களின் நிலை பற்றி தான் அவரோடு பேசியதாகவும் தலாய்லாமா குறிப்பிட்டுள்ளார்.

அதிமேற்றிராணி யார்டெஸ்மன்ட் டுடு தென் ஆபிரிக்காவில் அரசியல் ரீதியான இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் அரும் பங்காற்றியமைக்காக 1984ல் சமாதானத்துக்கான நோபல் பரிசுவென்ற அந்தநாட்டின் அதிமேற்றிராணி யார்டெஸ்மன்ட் டுடுவும் றோஹிங்யா மக்களின் இன்னல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு ஆங்சோங் சூகியைகேட்டுள்ளார்.

85 வயதான அவர் எனதுஅன்பின் தங்கையே என விழித்து ஆங்சோங் சூகிக்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி உள்ளார். செப்டம்பர் ஏழாம் திகதி எழுதப்பட்ட இந்தப் பகிரங்க கடிதத்தில் உங்கள் மக்கள் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப நீங்கள் அவர்களுக்கு மீண்டும் வழிகாட்டவேண்டும் எனக் கேட்டுள்ளார். அரசியல் ரீதியான உச்சநிலையை நீங்கள் தக்கவைத்துக் கொள்வதற்கு உங்கள் மௌனம் தான் விலை என நீங்கள் கருதினால் அந்த மௌனம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாட்டுக்குள் சமாதானம் இல்லை என்றால், அந்த நாடு அதன் மக்களின் கௌரவத்தை ஏற்றுக் கொண்டு அதை பாதுகாத்து தனது மக்களின் பெறுமதியை நிலைநிறுத்த தவறினால் அது ஒரு சுதந்திரமான நாடாக இருக்க முடியாது. ஒழுக்க விழுமியங்கள் மிக்கவர்களால் அத்தகைய ஒரு நாட்டுக்குத் தலைமை தாங்கவும் முடியாது. எம்மை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கும்விடயமும் இது தான் என அவர் தெரிவித்துள்ளார்..

இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் மார்க்கத் தலைவர்கள் எனதம்மைஅழைத்துக் கொள்பவர்களினதும் நிலை என்ன? இதில் கவலைக்குரியவிடயம் என்னவென்றால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்றுஒன்று இன்றுஉலகில் இல்லவே இல்லை. இவர்கள் எல்லோருமேமேற்குலகின் கீழ்படிவுமிக்க சேவகர்களாகவே உள்ளனர். அடுத்தது மார்க்கத் தலைமைகள். இவர்கள் கூட அந்த அநியாயக்கார சர்வாதிகார ஆட்சியாளர்களின் கூலிப்படைகளாகத் தான் உள்ளனர்.

அண்மைக்காலத்தில் ஒரேயொருகுரல் தான் முஸ்லிம் உலகில் துணிச்சலாக ஒலித்தது. அது மலேஷியாவின் முன்னாள் பிரதமர் டொக்டர் மஹாதிர் மொஹம்மட் உடைய குரல். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் அரபு உலக சர்வாதிகார பொம்மைகளுக்கு எதிராக துணிச்சலாகக் குரல் கொடுத்தவர் அவர்தான்.
மிக அண்மையில் மத்தியகிழக்கின் சில சர்வாதிகாரிகளும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக கல்விமான்கள் சிலரும் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒழிப்பை கண்டித்துள்ளனர். ஆனால் எவ்வாறேனும் கிட்டத்தட்ட மத்திய கிழக்கின் எல்லா ஆட்சியாளர்களும் இஸ்ரேலுடன் ஒத்துழைப்புக்களை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். யெமன், ஈராக், சிரியா, சோமாலியா, லிபியா உற்பட எல்லா நாடுகளிலும் இடம்பெறுகின்ற மோதல் நிலைகளுக்கு மூல காரணமாக உள்ள இஸ்ரேலுடன் அவர்கள் இரகசிய உடன்பாடுகளைக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

இந்தவிடயத்தில் சமய ரீதியாக முதலில் பதில் அளித்திருக்க வேண்டிய தலைவரும் கல்விமானுமாக புனித மக்கா பள்ளிவாசலின் இமாம் இருந்திருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றுமத்தியகிழக்கின் குழப்பநிலைகளுக்கெல்லாம் யார் மூல காரணமாக இருக்கின்றார்களோ அந்த ஆட்சியாளர்களின் கைப்பொம்மையாகவே அவர் திகழ்கிறார். இஸ்லாம் பற்றிப் பேச அவரால் வாய் திறக்க முடியாது. சவூதி ஆட்சியாளர்கள் என்ன சொல்லுகின்றார்களோ அதுதான் அவருக்கு இஸ்லாம். மனித குலத்துக்கு அருட் கொடையாக அனுப்பப்பட்ட இறைதூதர் முஹம்மது நபி போதித்த இஸ்லாம் மார்க்கமல்ல இவர்களின் மார்க்கம்.

இன்னொருபுறத்தில் அபுதாபி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக ஒரு யுத்தப் பிரகடனமே செய்துள்ளது. எகிப்தில் ஆட்சி கவிழ்ப்பில் அது வகித்த பங்களிப்பு யெமனில் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதில் அதுகாட்டிவரும் ஆர்வம் என்பன இதற்கு சான்றாகும். மத்திய கிழக்கில் இஸ்ரேலின் கூலிப்படையாக அபுதாபி மாறியுள்ளது.
மத்தியகிழக்கின் கேவலமான இன்றைய நிலை இதுதான். அதனால் அவர்களிடம் இருந்து றோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. இந்தக் காரணங்களால் தான் உலகம் முழுவதும் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதில் இஸ்லாத்துக்கு விரோதமானசக்திகள் கைகோர்த்து முனைப்புடன் செயற்படுகின்றன.

இதேவேளை லண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியும் ஆராய்ச்சியாளருமான றீம்அஹமட் என்பவர் ‘தேசியவாத நோயும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள இனவாதமும் தான் றோஹிங்யாக்கள் விடயத்தில் முஸ்லிம் சமூகம் செயல் இழந்து நிற்க முக்கியகாரணங்கள்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்கள் சிலவும் இங்கு அவதானிக்கத்தக்கவை.

முஸ்லிம்களாகிய எம்மத்தியில் தேசியவாதமும் இனவாதமும் இருக்க கூடாது என்பதுதான் எமக்குப் போதிக்கப்பட்டுள்ள பாடங்கள். அவற்றுக்கு எமது சமூகத்தில் இடமில்லை.

ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரில் மிகமோசமானகொடுமைகளுக்குஉள்ளாக்கப்பட்டும் கூட இந்தசிந்தனைகள் காரணமாகத்தான் நாம் இன்னமும் செயற்படாமல் முடங்கியுள்ளோம். நாங்கள் முஸ்லிம்கள் இனவாதிகளோஅல்லதுதேசியவாதிகளோஅல்லஎன்றுஎம்மால் கூற முடியாது. காரணம் நாங்கள் அப்படித்தான் இனவாதிகளாகவும் தேசியவாதிகளாகவும் உள்ளோம். இதற்கான ஆதாரத்தை சிலர் கேட்கலாம். முஸ்லிம் சமூகங்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றபோது அதற்குஎதிரான எமது கொந்தளிப்பு தெரிவு செய்யப்பட்டதாகவே உள்ளது.மேலும் பிரிட்டனில் வாழும் நாம் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் என்றரீதியில் தான் எமது உடனடி பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.

மத்திய ஆபிரிக்க குடியரசு, காஷ்மீர் ஆகிய இடங்களில் பாதிக்கப்படுகின்ற முஸ்லிம்கள் குறித்தஎமதுஎதிர்நிலைப்பாடுஎவ்வாறுஅமைந்துள்ளதுஎன்பதும் இதற்குநல்லதோர்உதாரணமாகும்.
மேலும் மேற்குலகநாடுகளில் தற்போதுபேசப்படும் இஸ்லாத்துக்குஎதிரானஅச்சம் அல்லது’இஸ்லாமோபோபியா’தொடர்பானவிடயத்துக்குநாம்எவ்வாறுவிரைந்துபதில் அளிக்கின்றோம். ஆனால் மேற்குலகுக்குவெளியே முஸ்லிம்கள் மீதுஅடக்குமுறைபிரயோகிக்கப்படுகின்றபோதுநாம் அதற்குஎப்படிபதில் அளிக்கின்றோம் என்பதும் அவதானிக்கப்படவேண்டும்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் தமதுநாட்டவர்கள் அல்லஅவர்கள் பங்களாதேஷ் பூர்வீககுடிகள் எனமியன்மார் கூறுகின்றது. ஆனால் அதைபங்களாதேஷ் ஏற்கமறுக்கின்றது. ஒருமனிதச் சமூகம் இருதரப்பால் நிராகிக்கப்படுகின்றமைக்கு இங்குமுக்கியகாரணமாகஅமைவதுஅவர்களின் தேசியவாதம்.அந்தசமூகத்தின் தோலின் நிறம் அவர்கள் சார்ந்துள்ளநாடுகள் என்பனஅவற்றைநாம் போதியஅளவில் பொருட்படுத்தாமல் இருப்பதற்கானகாரணங்களாகின்றன. இதுதான் எமது இனவாதம். இதன் விளைவுஆயிரக்கணக்கானஅப்பாவிகளின் மரணங்களாகஅமைந்துவிடுகின்றன.

அமெரிக்காவை ஹார்வே புயல் தாக்கியபோது கத்தார் விரைந்துவந்து 30 மில்லியன் டொலர்களைபாதிக்கப்பட்டமக்களுக்குஅன்பளிப்பாகவழங்கியது. ஐக்கிய அரபு இராச்சியம் 10 மில்லியன் அமெரிக்கடொலர்களைவழங்கியது. ஆனால் இந்த இரு நாடுகளும் றோஹிங்யாவிடயத்தில் செயல் இழந்துஅமைதிகாப்பதைவிட இதுவரைவேறுஎதுவும் செய்யவில்லை. ஐக்கியஅரபு இராச்சியத்துக்குள் சிறுபான்மையினர்நடத்தப்படுகின்றவிதமும் குவைத்தில் ஒருஎதியோப்பியபணிப் பென் எவ்வாறுநடத்தப்பட்டார்என்பதும் அரபுமேலான்மைபோக்கிற்கானதெளிவானசான்றுகளாகஅமைகின்றன.

1915 முதல் முஸ்லிம் சமூகம் மிகவும் திட்டமிடப்பட்டவிதத்தில் பிளவுபடுத்தப்பட்டுவந்துள்ளது. முஸ்லிம் நாடுகள் அடையாளம் காணப்பட்டுஅங்குமதச்சார்பற்றஅரசுகள் நிறுவப்பட்டு இறைபோதனைகளும் ஐக்கியமும் கைவிடப்படும் நிலைக்குகொண்டுவரப்பட்டன. இஸ்லாத்தைமட்டுமேஅடிப்படையாகக் கொண்டுஉருவாக்கப்படவேண்டியபிணைப்புகைவிடப்பட்டுபௌதிகரீதியானஎல்லைகளுக்கும் மனிததோலின் நிறத்துக்கும் முன்னுரிமைஅளிக்கும் நிலைதோற்றுவிக்கப்;பட்டது.
இத்தகையசெயற்பாடுகளின் பின்னணியில் தான் இன்றையறோஹிங்யாமக்கள் மீதானஅடக்குமுறையும் இனச் சுத்திகரிப்புநடவடிக்கைகளும் தொடருகின்றனஎன்றஉண்மையைஅவர்அந்தக் கட்டுரையில் தெளிவாகவிளக்கிஉள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here