ரோஹிங்கியா: முடிவின்றித் தொடரும் வரலாற்றுத் துயரம்

0
0

 – முஷாஹித் அஹ்மத் –

சமீபகால உலக வரலாற்றில் முழு மொத்த புவிப் பரப்பிலும் மிக மோச மாக சோதிக்கப்பட்ட சமூகம் மியன்மாரின் ரெக்கைன் மாநில ரோஹிங்யர்களே. இதைத்தான் ஐ.நா. பொதுச் செயலாளர் “புவியில் மிக மோசமாக சோதிக்கப்படும் சிறுபான்மை” என்று வர்ணித்தார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முன்னாள் தலைவர் செய்யித் ராஇத் ஹுஸைன் “இனச் சுத்திகரிப்புக்கு ஒரு பாடநூல் உதாரணம்” என்று இந்த வரலாற்றுக் கொடுமையை வர்ணித்திருந்தார். ஆனால், ஐ.நா. மனித உரிமைப் பேரவை முதல் உலக வல்லரசுகள் வரை எவரும் ரோஹிங்யர்களின் துயர் துடைப்பதற்கு செயலளவில் முன்வரவில்லை என்பது மிகுந்த துயரத்திற்குரியது.

2017 ஆகஸ்ட் மாதம் ரெக்கைன் மீது கட்டவிழ்க்கப்பட்ட இராணுவ அடாவடித்தனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திட்டமிட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். 7 இலட்சம் மக்கள் நடந்தே வந்து பங்களாதேஷில் தஞ்சம் புகுந்தனர். இன்னும் 480,000 ரோஹிங்யர்கள் ரெக்கைனில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

மியன்மார் இராணுவத்தின் மீது போர்க் குற்ற விசாணைகள் ஆரம்பிக் கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் புதிய தலைவி மிச்செல் பெச்லட் வற்புறுத்தியுள்ளார். சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி யான இவர் கூட இளவயதில் சித்திர வதைகளை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 01 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தலை மைப் பதவியை ஏற்ற பெச்லட் வெளியிட்ட முதல் அறிவிப்பே ரோஹிங்யர் களுக்கு எதிரான மியன்மார் அரசின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இது தொடர்பில் மிச்செல் பெச்லட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் மியன்மாரின் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு புதியதோர் பொறி முறை உருவாக்கப்பட வேண்டும். இப்பேரவை மியன் மார் தொடர்பான தீர்மான மொன்றை நிறைவேற்றி, அதற்கான ஆதரவைப் பெறுவதற்கு பொதுச் சபைக்கு முன்வைக்க வேண்டும். அதன் பின்னர் போர்க் குற்றத்தோடு சம்பந்தப்பட்டவர்களை ஹேக்கிலுள்ள குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 27 இல் மியன்மார் ரோஹிங்யா விவகாரம் குறித்து ஒரு சுதந்திர சர்வதேச உண்மை கண்டறியும் குழு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், ரோஹிங்யர்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் கட்டவிழ்த்த இனப்படுகொலை திட்டமிடப்பட்டவை. தாராளமான போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் ஏற்கனவே நன்கு முறைப்படுத்தப்பட்டவை என்பதை வெளிப்படுத்தியிருந்தது. இனப்படுகொலைகளுக்குப் பொறுப்பான மியன்மாரின் ஆறு உயர் இராணுவ அதிகாரிகளை ஐ.நா. ஏற்கனவே பட்டியலிட்டுள்ளது.

இதற்கிடையில் ரெக்கைனில் எஞ்சியுள்ள ரோஹிங்யர்கள் மீதான வன்முறைகளும் மனிதாபிமானத்திற்கு முரணான அடாவடித் தனங்களும் தொடர்வதாக மிச்செல் பெச்லட் குற்றம் சுமத்தியுள்ளார். 2018 இல் மாத்திரம் 12,000 ரோஹிங்யர்கள் பங்களாதேஷிற்கு அகதிகளாய் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கொடூரமான அடக்கு முறைகள், சட்டவிரோதப் படுகொலைகள், பாலியல் வல்லுறவு, தான்தோன்றித் தனமான கைது நடவடிக்கைகள் தொடர்வதனாலும் பங்களாதேஷில் நிலைகொண்டுள்ள 9 இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் தாயகம் திரும்பும் உரிமை மறுக்கப்படுவதனாலும் ரோஹிங்யர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுõர்.

பங்களாதேஷிற்கு ரோஹிங்யர்களை அகதிகளாகப் புலம்பெயருமாறு நிர்ப்பந்தித்தமை நடைமுறையிலுள்ள சர்வதேச சட்டங்களின்படி மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். இதனை முன்னிறுத்தியே முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தை பேரவையின் தலைவி பெச்லட் வரவேற்றுள்ளார்.

இது ரோஹிங்ய மக்களின் துயரைத் துடைப்பதற்கு குற்றவியல் நீதிமன்றம் எடுத்துள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கை என்று பெச்லட் குறிப் பிட்டுள்ளதோடு, பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் மியன்மார் விவ காரம் குறித்து விசாரிப்பதற்கான ஒரு சுதந்திர சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளையும் தான் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மியன்மார் இனப்படு கொலை குறித்து தரவுகளை திரட்டச்  சென்ற சர்வதேச பத்திரிகையாளர்கள் சிலர் சிறையிடப்பட்டு நீதிமன்ற விசா ரணைகளுக்கு உட்பட்டுள்ளதையும் மிச்செல் கவலையோடு நினைவு கூர்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையானது கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை கொல்லப்பட்ட ரோஹிங்யர்களின் தொகை 25 இற்கும் அதிகமானது என அறிக்கையிட்டுள்ளது. அதேவேளை. பெண்களும் சிறுமிகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது 288 கிராமங்கள் முற்றாகக் கொழுத்தி எரிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின் செய்மதிப் புகைப்படங்கள் இதனை நிறுவியுள்ளன.

பங்களாதேஷில் நிலைகொண்டுள்ள 9 இலட்சத்திற்கும் அதிகமான அகதி களின் நிலையோ சோகமயமாகி வருகின்றது. வருமானமின்மையால் பெண்கள் அயல் நாடுகளுக்கு பாலியல் தொழிலாளர்களாக கடத்திச் செல்லப் படுகின்றனர். சுகாதார ஆரோக்கிய குறைபாடுகளால் பெருந்தொகை குழந்தைகள் தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். போஷாக்கின்மை யால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் தொகையோ அதிர்ச்சியூட்டும் அளவு அதிகரித்து வருகின்றது. எல்லாவற்றுக்கும் அப்பால் அனைத்துக் குழந்தைகளும் கல்வி வாய்ப்பினை முற்றிலும் இழந்துள்ளனர். இவ்வாறு மனிதர்களாய் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் திட்டமிட்டு  மறுக்கப்பட்டுள்ள ஒரு மக்கள் திரளின் துயரம் முடிவின்றித் தொடர்கிறது.

மியன்மாரின் ஆங்சான் சூகி அரசாங்கம் இதற்குப் பதில் கூறுமா? அல்லது ஐ.நா. மனித உரிமைப் பெரவைதான் விடை சொல்லுமா?

மியன்மார் – நிகழ்வுகளின் குறிப்பேடு

 • ஹி. இரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் அறிமுகம். உமைய்யா, அப்பாஸியர் ஆட்சிக்காலத்தில் அரக்கானுடன் நெருக்கிய தொடர்பு.
 • 1430 ஆம் ஆண்டு நர்மக் ஹிலா ஸுலைமான் ஷாஹ் அரக்கானில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார். இவர் நிறுவிய ஆட்சி 354 ஆண்டுகள் நீடித்தன. 18 ஆட்சியாளர் கள் அரக்கானை ஆண்டனர்.
 • 1784 செப்டம்பர் 28 பூதாபாய் எனப்படும் பர்மா ஆட்சியாளர் அரக்கானை ஆக்கிரமித்து பள்ளிவாயல்கள், பாடசா லைகள், அறபு மத்ரஸாக்களை அழித்தான். தொடர்ந்தும் அங்கு பர்மா இராணுவம் நிறுத்தப்பட்டது.
 • 1824 இல் பிரிட்டிஷ் இந்தியாவைக் கைப்பற்றியிருந்த காலகட்டத்தில் மியன்மாரை பிரிட்டிஷ் கைப்பற்றியபோது அரக்கானையும் அதனோடு இணைத்தது.
 • 1937 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் அரக்கான் பர்மாவின் ஒரு பகுதி என அறிவித்தது.
 • 1948 ஜனவரி 4 இல் பர்மா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்தைத் தொடர்ந்து (Union Citizenship Law) எனும் சட்டத்தை பர்மா அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அது தேசிய அடையாள அட்டையைக் கட்டாயப்படுத்தியது. ஆனால், அரக்கான் முஸ்லிம்களுக்கு தேசிய அடையாள அட்டை மறுக்கப்பட்டது.
 • 1962 இல் பர்மாவில் இராணுவ சதிப்புரட்சி நடந்தது. தேசிய அடையாள அட்டைக்குப் பகரமாக தேசியப் பதிவு அட்டை (National Registration Card) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பதிவு அட்டையும் முஸ்லிம்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
 • 1982 நே வின் (Ne Win) என்பவர் இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்திற்கு வந்தார். முஸ்லிம்களிடமிருந்து தேசியப் பதிவு அட்டை பிடுங்கப்பட்டது. முஸ்லிம்கள் பர்மாவின் தேசியக் குடிகள் அல்ல என அறிவிக்கப்பட்டதோடு பங்களாதேஷில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகள் என்று நே வின் அரசு அறிவித்தது.

இனப்படுகொலையின் வரலாறு.

 • 1940 – இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களுக்கும் ஜப்பானியர்களுக்குமிடையிலான போர்க்களமாக பர்மா மாறியது. குறிப்பாக சுதந்திரக் குடியரசாகக் காணப்பட்ட அரக்கான் நாடு பிரிட்டனின் ஆடுகளமாக மாறியது. அரக்கான் மாநிலமே 1784 இல் பர்மாவுடன் இணைக்கப்பட்டு ரெக்கைன் என மருவியது. அங்கு சிறுபான்மையாக முக் இன பௌத்தர்கள் குடியேற்றப்பட்டனர். முக் இனத்தவரை அரக்கான் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்பிய பர்ம அரசாங்கம் 1940 களிலிருந்தே இனப்படுகொலை களைக் கட்டவிழ்த்தது. 1940 களிலேயே ஒரு இலட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 308 முஸ்லிம் கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.
 • 1942 – பர்மா அரச படையினரால் கட்டவிழ்க்கப்பட்ட திட்டமிட்ட இன வன்முறையின் போது நூற்றுக் கணக்கான அரக்கான் ரோஹிங் கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பள்ளிவாயல்கள், அறபு மத்ரஸாக்கள் கொளுத்தப்பட்டன. 5 இலட்சம் ரோஹிங்கியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு (தற்போதைய பங்களாதேஷிற்குப்) புலம் பெயர்ந்தார்கள்.
 • 1948 ஜனவரி 4 – பர்மா எனும் பௌத்த நாடு ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதன்போது அரக்கான் பர்மாவின் ஒரு பகுதி என அறிவிக்கப்பட்டது.
 • 1954 – மூட்டப்பட்ட இனக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டதோடு பல பத்தாயிரம் பேர் தாய்லாந்து, மலேஷியா, பங்களாதேஷ் என்பவற்றுக்குத் தப்பியோடினர்.
 • 1978 – இராணுவ அரசாங்கம் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்தது. பல்லாயிரக் கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர்.
 • 1982 – நே வின் ஆட்சி வந்தது. ரோஹிங்கியா என அரக்கான் முஸ்லிம்கள் அழைக்கப்பட்டது சட்ட ரீதியில் தடுக்கப் பட்டது. பங்காளிகள் என்றே அழைக்கப்பட வேண்டுமென சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பர்மாவில் பங்காளிகள் வந்தேறு குடிகள் எனக் கருதப்பட்டனர்.
 • 1990 – இராணுவம் நேரடியான இனச் சுத்திகரிப்பில் இறங்கியது. 268 000 ரோஹிங்கியர்கள் எல்லைப்புற நாடான பங்களாதேஷிற்கு இடம்பெயர்ந்தனர்.
 • 1994 – திட்டமிட்ட அரச பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்பட்டு இடம்பெற்ற வன்முறைகளில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியர்கள் கொல்லப்பட்டனர்.
 • 1996 – அரக்கானின் முக் இனத்தவர்களின் ஆதரவுடன் இராணுவம் நடாத்திய இனக் கலவரங்களில் பெண்கள் வேட்டையாடப் பட்டனர். மஸூதிகள் கொளுத்தப்பட்டன.
 • 2005 – மீண்டும் அரச படையினரின் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன.
 • 2012 – ஜுன் 10 இல் பௌத்த பெண் ஒருவரை ரோஹிங்கிய இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என்று வதந்தி பரப்பப்பட்டது. அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு திட்டமிட்ட முறையில் இனச் சுத்திகரிப்பு இடம்பெற்றது.
 • 2017 – ஆகஸ்ட் இதற்கு முந்திய சில ஆண்டுகளாக அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டு 07 இலட்சம் ரோஹிங்கியர்கள் வெளியேற்றப்பட்டனர். பங்களாதேஷில் துறைமுக நகராக கொக்ஸ் பஸாரில் ரோஹிங்கிய அகதிகள் தட்டழிந்து வருகின்றனர்.
 • 2018 – ரெக்கைன் ரோஹிங்கியர்களின் வாழ்விடம் தரைமட்ட மாக்கப்பட்டு மியன்மார் அரசாங்கத்தின் இராணுவ முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு பெற்றோலிய வளம் உள்ளதாக நம்பப்படும் நிலங்கள் சீனாவுக்கு ஒப்படைக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here