வற்றாத கருணை வெள்ளம்

0
1

furqan beeMFCD நிறுவனத்தின் மூலம் புத்தளம் பகுதியில் இருந்து சுத்திகரிப்பு செய்வதற்காக வெல்லம்பிட்டியவில் இருக்கும் எமது வீட்டிற்கு இளைஞர்கள் வருகை தந்துள்ளனர். முன்பு இப்படியெல்லாம் இல்லை, ஆனால் இப்போதைய இளைஞர்களுக்கு இவ்வாறு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கின்றது. ஓர் வெள்ளம் அல்லது அனர்த்தம் நிகழ்ந்தால், பொதுவாக எல்லோரும் பொருள் வசதி, பண வசதி என்பவற்றையே வழங்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அரிசி, பருப்பு, சீனி என்பவற்றை அவர்களுக்கு கொடுத்துவிட்டால் போதுமென்று நினைக்கின்றார்கள். இப்படிப்பட்ட உடல் உழைப்புக்கள், சுத்திகரிப்பு தேவைகள் இருப்பதை பலர் உணர்வதில்லை. ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று ஒருமுறை பாருங்கள், அவர்கள் இறந்தபின்னர் அஞ்சலி செலுத்துவதற்கு அல்லது துக்கம் விசாரிப்பதற்கு மட்டும் செல்ல வேண்டாம், இருக்கும்போதே சென்று சிறு உதவியையாவது செய்துகொடுங்கள் என்பதே பொதுமக்களுக்கான எனது கருத்து.

– புர்கான் பீ இப்திகார், பிரபல வானொலி அறிவிப்பாளர் –

sajeevani (garment)நான் சஜீவனி. லன்சியாவத்தையில் ஆடை தொழிற்சாடை ஒன்றை நடாத்தி வருகின்றேன். இப்பகுதியைச் சேர்ந்த 9 பெண்மணிகள் இத்தொழிற்சாலையில் வேலைபார்க்கின்றனர். அவர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி கடும்பாதிப்பில் உள்ளனர். எனது நிறுவனத்தில் இருந்த ஆடைகள், இயந்திரங்கள் பெரும்பாலானவை சேதம். 2,3 லட்சங்கள் எமக்கு நஷ்டம், மிகுந்த அசாதாரண  நிலையில் இருக்கின்றேன். பாதிப்பில் இருக்கும் ஊழியர்களுக்கும் நிதி உதவிகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். சில பொருட்களை மட்டுமே எம்மால் பாதுகாக்க முடிந்தது, அதுவும் இப்பிரதேசத்தை சுற்றியுள்ள முஸ்லிம் சகோதரர்கள் ஓடி வந்து எமக்கு உதவியதாலேயே சாத்தியமானது, அவை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. இங்கு ஏழு MFCD தம்பிமார் வேலை செய்கின்றனர், நாம் வேண்டிக்கொண்ட அடுத்தகணம் எமக்கு இவர்களின் உதவிகள் கிடைத்தன. நாம் இவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவர்கள். முஸ்லிம் சகோதரர்கள் தான் எமக்கு இந்த கடினமான நிலையில் உதவியவர்கள்! உங்களுக்கு மிக்க மிக்க நன்றி!

fldவெள்ளம் வடிந்தபின் வீட்டுக்கு வந்துபார்த்தபோது வீட்டுச் சாமான்கள் எல்லாம் குப்பைகளாகவே காட்சி தந்தன. நானும், என் மனைவியும் அநாதரவாக இருப்பதை உணர்ந்தேன். எமக்கு இங்கு உதவ யாருமிருக்கவில்லை. நாம் இருவரும் நோயாளிகள். MFCD என்று ஒரு நிறுவனம் சுத்திகரிப்பில் ஈடுபடுவதாக அறிந்து விரைந்தேன். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு உதவியை எமக்கு இந்நிறுவனம் செய்துள்ளது. இவர்கள் ஒரு சில மணிகளில் எம் வீட்டை சுத்தப்படுத்திவிட்டனர், இல்லாவிடில் பல வாரங்கள் நாம் இருவரும் சுத்தம் செய்திருக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகியிருக்கும். நாம் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அதிகம் பிரார்த்திக்கின்றோம். – ஜனித் –

flddவைத்தியர் ரியாஸ் காஸிமின் அமாயாஸ் யூனானி ஹேர்பல் சென்டர் இல் நான் பணிபுரிகின்றேன். நான் ஜெஸ்மின். வெல்லம்பிட்டிய பகுதியில் இருக்கும் எமது வைத்திய ஆராய்ச்சி நிலையம் முழுமையாக சேதமாகி இருக்கின்றது. தற்போது இங்கு MFCD சகோதரர்கள் சுத்திகரிப்பில் ஈடுபடுகின்றனர் அல்ஹம்துலில்லாஹ். தனது வைத்திய நிலையத்தின் நிலைமையை பற்றி அலட்டிக்கொள்ளாமல் எமது வைத்தியர் சமூக சேவை பணியில் தற்சமயம் இருந்து கொண்டிருக்கின்றார்.

snhநாம் பிரெண்டியாவத்தையின் உள் பகுதியில் உள்ள வென்னவத்தையில் வசிக்கின்றோம். இப்பகுதிகள் முழுதுமே வெள்ளத்தில் மூழ்கிய பிரதேசம், வெள்ளம் வடிந்து தற்போது இங்கு சேரும் சகதியுமான நீர் வீடெங்கும் பரவி இருக்கின்றது. நாம் எமது வீட்டை பழைய நிலைக்கு மீட்க இங்கு MFCD நிறுவன முஸ்லிம் சகோதரர்களே பாரிய உதவியை செய்திருக்கின்றார்கள். இங்கு தற்போது தண்ணீர் வசதியோ, மின்சார வசதியோ இல்லை.

சுத்திகரிப்புக்காக பொருட்களை சிலர் விநியோகிப்பதை அறிந்தோம், அவர்கள் வெல்லம்பிட்டிய நகருக்கு அண்டிய பகுதி மக்களுக்கே அவற்றை விநியோகம் செய்துள்ளனர். உள் பகுதிகளில் வாழும் மக்களால் பிரஷ் ஒன்றை வாங்கவும் வசதி இல்லாத நிலை தற்போது. உண்மையாக எனக்கு உதவியது இந்த முஸ்லிம் சகோதரர்கள்தான். இந்த இளம் சகோதரர்கள் தான் என் வீட்டை பழைய நிலைக்கு எனக்கு மீட்டுத் தந்தார்கள்! இன, மத பேதமின்றி உதவிய முஸ்லிம் சமூகத்துக்கு நான் எனது ஆழ்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். உண்மையாக நான் இப்போது முஸ்லிம்களை மதிக்கின்றேன். (சகோதர இன சகோதரி)
kavirathnaநான் கவிரத்ன.  இவர்கள் (MFCD) யாரென்று எனக்கு தெரியாது. இவர்கள் எனது வீட்டை சுத்தம்செய்து தரும்போது ஒவ்வொரு பொருட்களையும் மிக அவதானமாகவும், கவனமாகவும் கையாண்டதை அவதானித்தேன், எனக்கு மிகவும் சந்தோசம். பெரிய உதவியோன்ரை செய்துள்ளீர்கள்.எனக்கு யாரும் இல்லை. நான் உடல்முடியாமல் எனது கடைசி காலத்தில் வாழ்கின்றேன். (பரிதாபமாக அழுகின்றார்) இதற்குமுன் இரு இராணுவ வீரர்கள் வந்து சிறு உதவிசெய்துவிட்டு சென்றனர். அதற்குப்பின் வந்து முழுமையாக சுத்திகரிப்பில் நீங்கள்தான் ஈடுபட்டீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here