வான்வெளி அதிசயங்களை இலங்கையர்கள் இலவசமாக காணலாம்

0
0

இலங்கைவாழ் மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்யும் நோக்கில் வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது.

இவ் இலவச முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி இடம்பெற உள்ளது.

இதன்போது வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதும் வானியல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதும் நோக்கமாகும்.

இம்முகாம் இரவு 7.00 மணியிலிருந்து 10.00மணி வரையாக மூன்று மணித்தியாலங்கள் இடம்பெறவுள்ளது.

பொதுமக்கள் இலவசமாக இந்த முகாமில் கலந்து கொண்டு வான்வெளியை கூர்மையாக அவதானிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இது சிறந்ததொரு சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here