ஸீஸி – ஷெய்குல் அஸ்ஹர்: முடிவுக்கு வரும் தேனிலவு

0
1

அல் அஸ்ஹர் பல்கலைக்கழக அறிஞர்களது உயர் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கைகள் அவர்களுக்கும் ஸீஸி அரசுக்கும் இடையிலான தேனிலவு முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்தி வருகின்றன.

இராணுவப் புரட்சி மூலம் எகிப்தின் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஸீஸி, வாய்வழியாக விவாகரத்து மேற்கொள்ளும் தலாக் முறையை ரத்துச் செய்யுமாறு விடுத்த வேண்டுகோளை மறுத்து அஸ்ஹரின் மூத்த அறிஞர்களது கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேசிய பொலிஸ் தின நிகழ்வுகள் இடம்பெறும் தறுவாயில் மேடையில் ஸீஸி இருக்க ஷெய்குல் அஸ்ஹர் இவ்வாறு கூறியுள்ளமை அவதானிக்கத்தக்கது.

எனினும் இதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஆலோசித்து வருவதாக ஸீஸி தரப்பின் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இந்த விரிசல் ஸீஸி – ஷெய்குல் அஸ்ஹர் அஹ்மத் தய்யிப் இடையேயான விரிசலுக்கான பிரதான அடையாளமாகும்.

ஷெய்குல் அஸ்ஹராகத் பதவி வகித்து வரும் அஹ்மத் தய்யிப் பதவியிழந்த முன்னாள் அதிபர் முபாரக்கின் அல்வதன் கட்சியின் உயர்பீட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for sisi azhar tayeb

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here