ஸ்கூல் ஆக மோசம், படிப்பு கொஞ்சமும் ஷரில்ல

0
0

Fayes Ahmad

சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு எக்ஸாமுக்காக பொரள்ளையிலுள்ள ஒரு பிரபல சிங்கள பாடசாலைக்கு சென்றிருந்தேன் .பிரதான வாசலால் உள்நுழைந்ததும் முதலில் கண்ட காட்சி உள்ளே பலர் மண்வெட்டி,அலவாங்கு சகிதம் வேலை செய்து கொண்டிருந்தனர் .

எக்ஸாமுக்கு நேரம் இருந்ததால் வாசலில் புல் பிடுங்கிக் கொண்டிருந்த ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தேன் .

“அண்ணா ,இன்னிக்கு சிரமதானமா?”

“ஓம் தம்பி, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த பாடசாலையில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வந்து பாடசாலையை சிரமதானம் செய்வோம்.”

“அப்படியா ,எல்லாரும் வருவாங்களா?”

“சாதாரணமாக நூற்றுக்கு எண்பது பேர் அளவில் வருவார்கள் .”

“ம்,அண்ணா என்ன செய்றீங்க?”

“நான் ஒரு டாக்டர் ,களுபோவிலை ஹாஸ்பிட்டலில் வேலை செய்றேன்.”

அப்படியே உள்ளே வந்து உட்கார்ந்து எமது தமிழ்,முஸ்லிம் பாடசாலைகளைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன்.

எனக்குத் தெரிந்த பல பெற்றோர்கள் மாணவனை முதலாம் தரத்தில் சேர்க்க Birth certificate உடன் உள்நுழைந்தவர்கள் திரும்ப அந்த பாடசாலைக்குள் காலடி எடுத்து வைத்தது அந்த மாணவன் படித்து முடிந்து வெளியேறும் போது அவனது Leaving certificate ஐ எடுக்கத்தான் உள்நுழைந்தார்கள்.

ஆனால் பாடசாலையில் ஏதாவது பிரச்சினை என்றாலோ, அதிபர் அல்லது ஒரு ஆசிரியர் ஒரு தவறு செய்தாலோ சந்தி சந்தியாக நின்று அவரை கழுவி ஊற்றாதவரை எங்களுக்கு திருப்தியில்லை.

“ஸ்கூல் ஆக மோசம், படிப்பு கொஞ்சமும் ஷரில்ல” என்று கதை அளப்போம், ஆனால் அதை இல்லாமலாக்க எந்த வழிமுறையும் செய்யாமலே காலம் கழிப்போம்.

பாடசாலையில் சிரமதானம் என்றால் பெற்றோர் என்ன, மாணவனே அந்த நாட்களில் பாடசாலை கட் அடிப்பான். அதை பெருமையாக ஊர் முழுக்க பேசியும் திரிவோம்.

நாங்க‬ எல்லாம் முன்னேற இன்னும் ரொம்ப வருசம் இருக்குப்பா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here