07 ஆவது உயிரையும் பலியெடுத்தது கொரோனா

0
2

பரவி வரும் கொவிட் 19 இன் தாக்கத்துக்குப் பலியான ஏழாவது இலங்கையர் நேற்றுப் பதிவானார். கல்கிஸ்ஸையில் வசித்த பேருவளை மக்கொனையைப் பிறப்பிடமாகக் கொண்ட 44 வயது மாணிக்க வியாபாரியே ஐடிஎச் இல் சிகிச்சை பெற்று வந்த வேளையில் நேற்று மரணத்தைத் தழுவியுள்ளார்.

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இவர் தன்னைப் பரிசோதனைக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்து வந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 12 ஆம் திகதி இவரை ஐடிஎச் இல் சிகிச்சைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட போதும் இவர் தனது குடும்ப வைத்தியரிடம் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் பொரள்ளை சளி வைத்தியசாலையிலும் பின்னர் தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றதாகவும், 15 ஆம் திகதியே இவர் ஐடிஎச் இல் அனுமதிக்கப்பட்டதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவு, விஷேட அதிரடிப் பிரிவு என்பனவும் இவர் தொடர்பில் தேடுதல் நடத்திய போதும் அவரது மனைவியும் இணைந்து அவரைக் காட்டித் தர மறுத்ததாகவும் இதனால் இவர்கள் இருவருக்கும் எதிராக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை கொரோனாவினால் மரணித்தவர்கள் 07 பேருமே ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here