ருமேனியாவின் முதல் பெண் மற்றும் முஸ்லிம் பிரதமராக "ஷ்ஹைதா"

0
1

ருமேனியாவின் சோஷலிச ஜனநாயகக் கட்சி அதன் அடுத்த பிரதமராக “ஷ்ஹைதா” என்ற முஸ்லிம் பெண்மணியை சிபாரிசு செய்துள்ளது. முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையாக வாழும் இந்நாட்டில் ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது முக்கிய அம்சமாக பேசப்படுகின்றது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பில் ருமேனியா பாராளுமன்றம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது.

ருமேனியாவின் மொத்த சனத்தொகையில் இற்கும் அதிகமானோர் கிருஸ்தவர்களாக இருக்கும் நிலையில் இச்சிபாரிசு ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டிசம்பர் 11 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இக்கட்சி போதுமான அளவு அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டரசாங்கமொன்று அமைலாம் என்ற நிலையில், அதிக பிரசித்தி பெறாத ஒருவர், அவரது நிர்வாக திறமையை, பொருளாதார நிபுண்தத்துவமிக்க சிறந்த பொருளியலாளர் ஆகிய நோக்கங்களை கௌரவித்து சிபாரிசு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரது கடின உழைப்பையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நியமனம் வழங்கப்படுமிடத்து ஐரோப்பிய சூழலில் முக்கியதொரு பதவியாக இது அமையும். ஏனெனில், பாராளுமன்றத்துக்கு வகைகூறக்கூடிய அதிகாரம் பிரதமருக்கே காணப்படுகின்றது.

கட்சியின் தலைவர் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியாது என்று ருமேனிய நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையிலேயே இச்சிபாரிசு இடம்பெற்றுள்ளது. எனினும், கட்சியின் தலைவர் ட்ராக்னா பின்னணியில் இருந்து அரசை இயக்குவார் என்று கூறப்படுகின்றது.

ருமேனிய ஜனாதிபதி இதுதொடர்பான இறுதி தீர்மானத்தை ஞாயிறன்று அறிவிக்க உள்ள நிலையில் இதற்கு எதிர்கட்சியின் ஆதரவும் அவசியம் என்றபடியால் அதன் சாத்தியம்குறித்து பரவலாக பேசப்படுகின்றது.

52 வயதான சஹீபா ஒரு சிறந்த பொருளியல் நிபுணராக கருதப்படுவதோடு, 2௦15 இல் ஆறு மாதங்கள் நீடித்த அரசில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக தொழிற்பட்டதோடு, தற்போது அவ்வமைச்சின் உயர் அதிகாரியாக தொழிற்படுகின்றார்.

இவர் பிரதமரானால் முதல் பெண் பிரதமர், முதல் முஸ்லிம் பிரதமர்  ஆகிய இரு கௌரவங்களுடன் ருமேனிய வரலாற்றில் “ஷ்ஹைதா” என்ற பெயர் இடம்பெறும்.

 – மீள்பார்வை சர்வதேச நிருபர் –

Image result for Sevil Shhaideh

Image result for Sevil Shhaideh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here