15 முதல் நான்கு கட்டங்களில் கட்டார் விடுவிப்பு

0
0

கொவிட் 19 க்கென விதிக்கப்பட்ட தடைகளிலிருந்து 15 ஆம் திகதி முதல் நாட்டை நான்கு கட்டங்களில் விடுவிப்பதற்கு கட்டார் தயாராகி வருகிறது. சுகாதார வழிகாட்டல்களுக்கேற்ப இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக கட்டார் அரசின் பேச்சாளர் லுல்வா ராஷித் அல் காத்தர் தெரிவித்தார்.

முதல் கட்டத்தில் சில பள்ளிவாசல்கள் திறக்கப்படுவதோடு, விமான சேவைகள் சிலதும் ஆரம்பிக்கப்படவுள்ளன.  இரண்டாவது கட்டம் ஜூலை 01 இலும், மூன்றாவது ஆகஸ்ட் 01 இலும் நான்காவது கட்டம் செப்டம்பர் 01 இலும் விடுவிக்கப்படவுள்ளது.

இரண்டாவது கட்டத்தில் உணவகங்கள் பகுதியளவில் திறக்கப்படுவதோடு மூன்றாவது கட்டத்தில் ஆபத்து குறைந்த நாடுகளுக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படும். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.

விமான சேவைகளில் வதிவிட விசா உள்ளவர்களுக்கே முதலிடம் வழங்கப்படும். வெளியிலிருந்து கட்டாருக்குள் வருபவர்கள் விஷேடமாக ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் அவர்களது சொந்தச் செலவில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

நான்காவது கட்டத்திலேயே கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here