20 இனால் தகவல் அறியும் உரிமை வெகுவாகப் பாதிக்கப்படும்

0
2

20 ஆம் திருத்தச் சட்டத்தினால் பொது நிதி, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல், ஊழல் விசாரணை, தகவல் அறியும் உரிமை ஆகிய நான்கு விடயங்களில் குறிப்பான பலவீனங்கள் ஏற்பட முடியும் என ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர தெரிவித்தார்.

20 ஆவது திருத்தத்தில் தகவல் அறியும் உரிமை தவிர்க்கப்படாமல் இருப்பது நல்ல விடயம். தகவல் அறியும் ஆணைக்குழு அரசியலமைப்புப் பேரவையினால் நியமிக்கப்படுகிறது. ஆனால் 20 ஆம் திருத்தத்தில் இதற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட பாராளுமன்றப் பேரவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நியமிக்கப்படுகின்ற தகவல் அறியும் ஆணைக்குழுவினால் தகவல் அறியும் உரிமைச் செயற்பாடுகள் அபாயத்துக்குள்ளாகின்றன. ஏனெனில் பாராளுமன்றப் பேரவை அவதானிப்புக்களை வழங்கும் விதமும், அந்த அவதானிப்புக்களின் வழியே அடுத்தவர்கள் செயற்பட வேண்டிய விதமும்  மாறுபட்ட கோணங்களை உடைய நபர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவையை விடவும் பலவீனமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேபோல இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவை பலமிழக்கச் செய்திருப்பது ஊழலை ஒழிப்பதாக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாற்றமாக உள்ளது. தேசிய கணக்காய்வு ஆணைக்குழு பலமிழக்கச் செய்யப்பட்டுள்ளதால் எந்த அரசாங்க அதிகாரியும் பொதுச் சொத்துக்களும் நிதியும் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதை இல்லாமல் செய்துவிடும். அதேபோல தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுக்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளமை தேர்தல்களின் போது பொதுச் சொத்துக்கள் பாவனையை கணக்கற்றதாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here