20,000 பெண்களை வேட்டையாடிய சிரியாவின் உள்நாட்டுப்போர்

0
1

சிரியாவில் மனித உரிமை அமைப்புக்கள் (SNHR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
2011 ஆம் ஆண்டு முதல் நடக்கும் சிரியா உள்நாட்டு் போரில் இதுவரை 20,000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். 19,000 பெண்கள் அசாத்தின் படைகளால் பலியாகியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை சர்வதேச பெண்களுக்கான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் தினத்தை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
லண்டனை சேர்ந்த அரசு சாரா அமைப்பு(NGO) வெளியிட்டுள்ள தகவலில்,
சிரியா அசாத்தின் படைகள் இதுவரை 18,917 பெண்களை கொன்றுள்ளது. 7,029 பெண்களை கைது செய்துள்ளது. அதில் 318 பேர் சிறுமிகள் ஆவர் . ரஷ்யப் படைகள் 72 பெண்களை கொன்றுள்ளனர்.
சிரியாவின் குர்திஷ் படைகள் 42 பெண்களை கொன்றுள்ளது.
69 பெண்களை கைது செய்துள்ளது. ஐ ஸ் படைகள் 639 பேரை கைது செய்துள்ளனர். மற்ற ஆயுதம் ஏந்திய படைகள் 877 பேரை கைது செய்துள்ளனர்.
குறிப்பாக நிவாரணம் போன்ற சமூக உதவிகள் செய்து வரும் பெண்களை அசாத்தின் படைகள் கைது செய்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் பாலியல் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளது.
சிரியா போரில் 250,000 க்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7.6 மில்லியன் மக்கள் உள்நாட்டிலும், 4 மில்லியன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
– அபூஷேக் முஹம்மத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here