21/4 குண்டுத் தாக்குதலுடன் தொடர்பான சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு

0
1

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 64 பேரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்களுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து சஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேர் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுள் மூவர் இரு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து வாரியபொல பிரதேசத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் உட்பட 64 பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை (25) நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனையவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here