25,000 வேலை வாய்ப்புக்கள். பயிற்றப்பட்டவர்கள் இல்லை

0
4

கட்டட நிர்மாணம், ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை, தாதி, மோட்டார் வாகனத் துறைகளில் பல வேலை வாய்ப்புக்கள் இருந்த போதிலும் அவற்றை நிரப்புவதற்குத் தேவையான பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லாதிருப்பதாக தேசிய தொழிற்பயிலுனர் தொழிற்பயிற்சி அதிகார சபையின் (NAITA) ஆய்வொன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த இடைவெளியை நிரப்புவதற்காக தேசிய தொழிற்பயிலுனர் தொழிற்பயிற்சி அதிகார சபை நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் பயிலுனர்களைத் திரட்டி தேவையான அறிவையும் உள்ளகப் பயிற்சிகளையும் வழங்கவிருக்கின்றது. இந்தப் பயிற்சி நெறிகளுக்கு NVQ தரம் 3, 4 க்குரிய தரச் சான்றிதழையும் சபை வழங்கவிருக்கிறது.

இவர்களுக்கு இரண்டு மாதங்களில் அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதனுடன் தொழிற்பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் கற்கை நெறியை சிறப்பாகப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்தப் பயிற்சி நெறிகள் ஒக்டோபர் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான பயிலுனர்களைச் சேர்த்துக் கொள்ளும் பணிகள் எல்லா மாவட்டங்களிலுமுள்ள தேசிய தொழிற்பயிலுனர் தொழிற்பயிற்சி அதிகார சபையின் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here