சமூகம் விவாத மேடை

புதுப்பிக்கப்பட வேண்டிய தமிழ் முஸ்லிம் உறவு.!

Written by Administrator

– Mujeeb ur Rahman –

வரலாற்றுக் காலம் முதல் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்ந்து வந்துள்ளது. தற்போதைய இன முறுகல்கள் சுமார் 19 ஆம்  நூற் றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ஆரம்பித்துள்ளது. சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற கூற்றும், அதனைத் தொடர்ந்த முஸ்லிம் – சிங்கள இனக் கலவரம் என்பவற்றில் அவரின் நிலைப்பாட்டுடன் முஸ்லிம் தமிழ் இனங்களுக் கிடையிலான முறுகல் நிலை ஆரம்பித்துள்ளதாகவும் கூறலாம்.

அத்தோடு, ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களுடைய 50 க்கு 50 கோரிக்கை, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் மற்றும் மறைந்த தலைவர் தந்தை  செல்வநாயகம் அவர்களின் வட்டுக்கோட்டைப் பிரகடனம், அதன் பின்னர் ஏற்பட்ட மாநாடுகள் தோல்வியில் முடிந்தன. இதன்தொடர்ச்சியாக 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரம் அனைத்தும் தமிழ்-சிங்கள உறவை மாத்திரமன்றி தமிழ்-முஸ்லிம் உறவையும் பாதித்தது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமது பூர்வீகம், தனித்துவ கலாச்சாரம் மற்றும் மத விவகாரங்கள் என்பவற்றில் கூடிய கரிசனை காட்டுகின்றனர். இவைளே ஏனைய சமூகங்களுடனான உறவை வலுப்புடுத்துவதில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கருதுகின்றனர். முஸ்லிம்களாகிய நாங்களும் நீண்ட வரலாற்றைக் கொண்ட எமது மார்க்கமும் சமூகங்களால் வஞ்சிக்கப்படுவதாக உணர்கின்றனர்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரந்து வாழ்ந்தாலும், குறிப்பாக மூன்றில் இரண்டு பகுதியினர் வடகிழக்கில் வாழ்கின்றனர். சிங்களப்  பேரினத்திற்கும்  தமிழ் சமூகத்திற்குமிடையிலான   சாத்வீக வழிப் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது முஸ்லிம்கள் இடையில் அகப்பட்டு நசுக் கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீண்ட கசப்பான வரலாற்றைக் கொண்ட இரண்டு சமூகங்களின் உறவு மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தரப்புக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் தரப்புக்களும் உணர்ந்திருக்கின்றன.

நடந்தவைகள், பழையவைகள் யாவும் நடந்தவையாக இருக்க, புதியவைகள் சிறப்பாய் நடக்க தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டியிருக்கிறது.

எங்கள் பிராத்தனை எல்லாம் இதுதான்..

மண்ணகம் எல்லாம் மகிழ்ச்சியில் நிற்க

ஓரறி உயிரோ, ஆறறி உயிரோ

எல்லா உயிர்களும் இன்பம் எய்துக

சமுத்திர மேகம் மேலே எழுந்து

சமத்துவ மழையை தரையில் எறிக

நிலமோ கடலோ சிந்திவிடாமல்

உலக உருண்டை ஒழுங்காய்ச் சுற்றுக

இரங்கல் தீர்மானம் ஏதுமின்றி

நாடாளுமன்றம் நன்கு கூடுக

பள்ளிவாசலின் சாளரத்திலும்

பழைய கோவிலின் கோபுரத்திலும்

புறாக்கள் கட்டிய கூடுகள் வாழ்க

இரயிலோ, மெயிலோ எதில் சென்றாலும்

வீடுதிரும்பி வீடுபேறடைக…….!!!!

அன்பின் தமிழ், முஸ்லிம் உறவுகளே!, தமிழர்களினாலோ, முஸ்லிம்களினாலோ உங்களுக்கு ஏதாவது அநியாயங்கள், அடக்குமுறைகள், குரோதங்கள் நடைபெற்றிருந்தால் அதனை மீள்பார்வைக்கு எழுதியனுப்புங்கள். தமிழ்-முஸ்லிம் உறவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் எழுதுங்கள்.

உங்களது ஆக்கங்களை “வாத மேடை“ப் பகுதியில் பிரசுரிப்போம். இதன் மூலம் சமூகங்களுக்கிடையில் புரிதலையும்,  சகவாழ்வையும் ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

‘வாத மேடை’ மீள்பார்வை

Email: meelparvai@gmail.com

 49, Sri Mahinda Dharma Mawatha, Colombo & 09 Sri Lanka.

About the author

Administrator

Leave a Comment