சமூகம் மீள்பார்வை விவாத மேடை

இன்றைய சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களே காரணம்

Written by Administrator

இலங்கை முஸ்லிம்கள் தனித்துவ கலாசாரத்தைப் பின்பற்றுகின்ற, தனித்துவ மொழியைக் கொண்ட இறுக்கமான இரத்த உறவுகளைக் கொண்ட சமூகமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று தனித்துவமான மத அடையாளங்களும் காணப்படுகின்றன. அதன் அடிப்படையிலான கருத்துக் களைப் பரிமாறுவதுடன், இஸ்லாம் மதத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையையும் பின்பற்றி வாழ்கிறார்கள். இவை பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவர்களின் தனித்துவ மத, கலாச்சார, வாழ்வியல் ஒழுங்கில் இருந்து வேறுபட்டது.

இஸ்லாமிய மத அடிப்படையில் வாழ்வியலையும், அதன் நம்பிக்கைக் கோட்பாட்டின் அடிப்படையில் மத விவகாரங்களையும் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள், தங்களுக்கு தனித்துவமான விடயங்கள் உள்ளது போல், ஏனைய வர்களுக்கும் தனித்துவ கலாசார, மத, வாழ்வியல் ஒழுங்குகள் இருக்கின்றன என்பதை ஏன் புரிந்து கொண்டு, மதித்து வாழ முடியாமல் இருக்கிறார்கள்?

இது அவர்களின் மதத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையா? அல்லது அவர்களின் மனதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையா? இதன் வெளிப்பாடு களாகவே இவர்களால் ஏனைய சமூகத்தவர்களோடு இணைந்து வாழ முடியாமல் இருக்கிறார்களோ என்பது குறித்து எப்போதும் எனக்குள் பல கேள்விகள் எழும்.

விஷேடமாக வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஹிந்துக்களினதும், கிறிஸ்தவர்களினதும் தனித்துவ கலாசார, மத, வாழ்வியல் ஒழுங்குகள் அழகாகத் தெரியும். இருந் தும் அவர்கள், குறித்த மதத்தவர்களுடன் ஒருமித்து, ஒற்றுமையாக, சகவாழ் வோடு வாழ்வதற்கும், அவர்களைப் புரிந்து கொண்டு செயற்படுவதற்கும் தயங்குகிறார்கள். இதனை பாடசாலை மாணவர்கள் முதல் கற்ற பல்கலைக் கழகம், ஆசிரியர் குழாம் ஆகியோரிலும் காணலாம்.

ஒரே மொழி பேசுகின்ற, ஒருமித்து வாழ்கின்ற இரண்டு சமூகத்தவர்களுக்கு அந்தந்த மதத்தையும், கலாசாரத்தையும், தனித்துவத்தையும் சரியாகப் புரிந்து கொண்டு எம்மோடு வாழ முடியா விட்டால், மாற்று மொழி பேசுகின்ற அதாவது, சிங்களத்தைத் தாய் மொழி யாகக் கொண்டுள்ள பௌத்தர்களும், தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள முஸ்லிம்களும், இரண்டு இனத்தவர்கள். அவர்கள் எப்படி ஒற்றுமையாகவும், சகவாழ்வோடும் வாழ்வார்கள். அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சமத்துவம் எவ்வாறு நிகழும் என்பது குறித்து தினமும் சிந்திப்பதுண்டு.

இதன் வெளிப்பாடாகவே, பொது பலசேனா, சிஹல ராவய மற்றும் ராவன பலய போன்ற கடும்போக்கு சிங்கள இனவாத அமைப்புக்கள் தோன்றியிருக்க லாம் என்று நான் நினைப்பதுண்டு. அதாவது, தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லிம்களுக்கும் சிங்கள மொழி பேசுகின்ற பௌத்தர்கள், கிறிஸ்தவர் களுக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு இன்மையே காரணமாக இருக்கலாம். இவ்வாறான அமைப்புக் கள் தோன்றுவதற்கு ஒரு விதத்தில் முஸ்லிம்களும் காரணமாக இருக்கலாம்.

ஏனெனில், முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களோடு இணைந்து வாழ விரும்பாதவர்கள். அவர்கள் எப்போதும் தங்களது தனித்துவம், கலாசாரம் என்ப வற்றில் கடும்போக்காக இருப்பார்கள். அவ்வாறு ஏனைய மதத்தவர்களைப் புரிந்து கொண்டு வாழ மாட்டார்கள். ஏனைய மதத்தவர்கள் தங்களது மத மற்றும் கலாசாரத்தில் உறுதியாக இருந்தால் அதனைப் புரிந்துகொள்ளத் தயங்குவார்கள்.

இதனை வடகிழக்கில் அழகாகக் காணலாம். எங்களோடு வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற முஸ்லிம்கள் எங்களை சரியாகப் புரிந்து கொள்ளாததாலும், எங்களது கலாசாரத்தையும், மதத்தையும் புரிதலிலுள்ள குறைபாட்டின் காரணமாகத்தான் இன்று வடகிழக்கில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

ஆனால், முஸ்லிம்களுக்கு தனித்துவ மான மத, கலாச்சார அடையாளங்கள் இருப்பதை நாம் விளங்கியுள்ளோம். அதனைப் புரிந்துதான் முஸ்லிம்களோடு பழகுகிறோம். ஆனால், முஸ்லிம்கள் அடுத்த மதத்தவர்களின் தனித்துவ அடையாளங்களைப் புரிவதில்லை என்றே கூறவேண்டும்.

இதனாலேயே வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டிருப் பார்கள். இல்லையாயின் தமிழ் பேசுகின்ற ஒரு இனத்தை ஏன் புலிகள் வெளியேற்றினார்கள். இந்த முஸ்லிம் கள் தங்களோடு வாழ்கின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வில்லை. அடுத்தவர்களோடு இணைந்து வாழும்போது விட்டுக் கொடுப்புக்கள், பொறுமை காத்தல், சகிப்புத்தன்மை என்பவை முக்கியமாகும். இவற்றில் முஸ்லிம்கள் கொஞ்சம் குறைந்தவர்கள், மாறுபட்டவர்கள்.

வடகிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய முஸ்லிம்களை நோக்குகின்ற போது வேற்றுமையில் ஒற்றுமை காணத் தெரியாதவர்களாக வாழ்கிறார்கள். முரண்பாட்டில் உடன்பாடு காண்பது முஸ்லிம்களுக்கு மிகவும் கஷ்டமான விடயமாகவே இருக்கிறது. இது சிறந்த எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதற்கு உகந்ததாக அமையாது. ஆனால், பழைய முஸ்லிம் சமூகத் தலைவர்கள், ஏனைய சமூகத்தவர்களோடு ஒற்றுமையாகவும், உடன்பாட்டோடும் வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அப்படியாயின் ஏன் இன்றைய சந்ததி யினர் அவ்வாறு வாழ்கிறார்களில்லை? இதில் எங்கு தவறு ஏற்பட்டது என்பது குறித்து தெளிவில்லாமல் இருக்கிறது. சிலபோது முஸ்லிம்களுக்கான தனிக் கட்சி அரசியல் ஆரம்பித்ததில் இருந்து இது நடந்திருக்குமோ, அல்லது தற்போதுள்ள சமூக விரோதப் போக்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற தலைவர்கள் விதைத்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதனையே இன்றைய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அதன் பின்னர் முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கட்டும், மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாக இருக்கட்டும் இப்போது சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதையே செய்கிறார்கள்.

கடந்த மீள்பார்வை பத்திரிகையில் வெளியான கல்முனை விவகாரத்தை இதன் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. உண்மையில் முஸ்லிம்கள் கல்முனையில் என்ன செய்தார்கள்? அதன் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தது? என்பதை அதனை வாசிக்கும்போது விளங்குகிறது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை வைத்து நோக்கும்போது அடிப்படையில் கல்முனையின் முக்கிய பகுதிகள் தமிழர்களிடமே இருந்துள் ளது. அதனை முஸ்லிம்கள் அபகரித் துள்ளார்களா? அல்லது வாங்கியுள்ளார் களா? என்பது இன்னும் பல கேள்வி களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சரியான விடையை காண முடியாது.

ஏனெனில், ஒரு பிரதேசத்தில் ஒரு சமூகத்தவரோடு இணைந்து வாழ்கின்ற போது அவர்களைப் புரிந்து கொண்டு வாழவேண்டும். அவ்வாறில்லாமல் தொடர்ந்து தொந்தரவுகளும், இன்னல் களும் கொடுக்கின்றபோது அப்பிரதேசத்தை அவர்கள் விற்றுவிட்டுச் செல்வதற் குத்தான் முயற்சிப்பார்கள். அது கல்முனையில் நடந்திருக்காது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ஏனெனில், முஸ்லிம்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

இவ்வாறுதான் சம்மாந்துறையிலும் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களை முஸ்லிம்கள் பலவந்தமாக பறித்துள் ளார்கள். அங்கு வாழ்ந்த தமிழர்களை தொடர்ந்தும் தொந்தரவுக்குட்படுத்தி அவர்களது சொந்த இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு முஸ்லிம்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்கள். இதனை மட்டக்களப்பிலும் பரவலாகக் காணலாம்.

இப்போது முஸ்லிம்களின் ஆக்கிர மிப்பு வடக்கின் பல பாகங்களில் இடம்பெறுகிறது. வடக்கில் முஸ்லிம் களுக்குச் சொந்தமான அமைச்சர் ஒருவர் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி தமிழர்களின் காணிகளை முஸ்லிம்களுக்குப் பெற்றுக் கொடுக்கிறார். அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அமைச்சரின் செயலுக்கு எதிராக எந்த முஸ்லிமும் குரல் கொடுக்கவில்லை.

இது அன்று விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியபோது எப்படி தமிழ்த் தலைமைகள் மௌனமாக இருந்ததோ அதேபோல் தான் இன்றைய வடக்கு முஸ்லிம் தலைமைகள் மௌனமாக இருக்கிறது.

முஸ்லிம்களின் இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கலாம். எனவே, ஆரோக்கியமான, சகவாழ் வுடன் கூடிய, மனித நேயப் பண்பு கொண்ட சமூகம் ஒன்று உருவாக வேண்டும் என்றால், இன்றே முஸ்லிம் தலைமைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

-ஜோசப் மைகல்

மட்டக்களப்பு

About the author

Administrator

2 Comments

  • I agree with certain things in your above article but not all. To be frank, I am not from the NE in SL. I live in remote rural area in Kurunegala among the majority Sinhalese. We live peacefully and there are many Muslim villages outside NE in SL in which Muslims live peacefully with other communities. You should also understand that for Muslims the religion is a way of life which we cannot separate from our day to day life but we can live peacefully with others. We can actively engage in other communities’ activities without losing our basic tenets. Our people run small shops in many towns in SL and we do interact with non-Muslims than Hindus. We sell our things mostly to non-Muslims and thereby we interact with others. Nowadays we do community welfare services such as cleaning hospital gardens, arranging medical camps and donating blood to name a few. You mentioned that Muslims have grabbed Tamils lands. I don’t know about this as I don’t live in the NE. There are Tamils who moved to other parts of the SL due to the war. Some of them are still living in these places but Sinhalese did not tell them that they grabbed Sinhalese’ lands. I think many Tamils have left their native places during the war to EU countries and many have died in the war this might be a reason why there are less Tamils living in certain parts in the NE not because Muslims grabbed Tamil’s lands.

Leave a Comment