உலக செய்திகள் சர்வதேசம் பலஸ்தீன

சுரங்கத்தில் வீரமரணம் அடைந்த 7 ஹமாஸ் போராளிகள்

Written by Administrator

ஹமாஸ் தலைமையிலான அரசாங்கம் காஸாவில் அமைந்த பிறகு கடந்த 10 வருடங்களாக காஸா செல்லும் கடல், ஆகாயம் மற்றும் தரை என அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் மூடிவிட்டது.

எகிப்து வழியாக சென்ற ரபாஹ் எல்லை வழியையும் ஸீஸீ அரசு வந்த பிறகு நீண்ட நாட்களாக மூடிவைத்துள்ளது.
தங்களது வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கும் பூமியில் சுரங்கம் அமைத்து எகிப்து வழியாக பொருட்களை எடுத்து வருகின்றனர். இஸ்ரேல் எல்லையிலும் சுரங்கங்கள் அமைத்து இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்த சுரங்கங்கள் பயன்பாடாக இருக்கின்றன.

2014ம் காஸா போரின் போது இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்த பெரும் உதவியாக இருந்த சுரங்கம் ஒன்றில் தற்போது தடை ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் பணியில் ஹமாஸின் ராணுவ பிரிவு அல்-கஸ்ஸாம் படையை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

காஸாவில் கடும் மழை பெய்து வருகிறது அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் சுரங்கங்களை சூழ்ந்தது . அதையடுத்து 7 வீரர்கள் பலியாகினர் மற்றும் 4 வீரர்கள் தப்பித்தனர்.

7 பேர்களின் இறுதிச் சடங்கு பிரார்த்தனையில் 20,000 க்கும் மேற்பட்ட காஸா மக்கள் பெரும் திரளாககலந்துக்கொண்டனர். இதைப்பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹமாஸ்,

“தங்கள் தாய்நாட்டையும், புனிததளங்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க போராடும் பணியில் தங்களது உயிரை அர்ப்பணித்துள்ளனர். திறந்தவெளி காஸா சிறைச்சாலைக்கு சுரங்கங்களை தவிர வேறு வழி கிடையாது” என்றனர்.

 – அபூஷேக் முஹம்மத்

About the author

Administrator

Leave a Comment