சமூகம் மீள்பார்வை விவாத மேடை

முஸ்லிம்கள் தோற்றுப் போனால் தமிழர்கள்?

Written by Administrator

(வித்தியாசமான ஒரு பகுதியை ஆரம்பித்துள்ள மீள்பார்வை, இதன் மூலம் அடைய நினைப்பது என்ன என்பது குறித்து நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. ஆனால், இது மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகவும் காண்கிறேன். இதில் தமிழ் சகோதரர்கள் பலர் தங்களது கருத்துக்களை மனந் திறந்து வெளிப்படுத்துகிறார்கள். அவைகளுக்கு பதிலளிப்பதா? அல்லது அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதா என்பது குறித்தும் சிந்திப்பதுண்டு. இருந்தும், இரண்டு தினங்களுக்கு முன்னர் எனது அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில், எனது இக்கருத்தை மீள்பார்வையின் வாதமேடைப் பகுதியில் பிரசுரிக்க விரும்புகிறேன்.)

இலங்கையில் முஸ்லிம்கள் அடக்கப்படுவார்களானால் தமிழர்களின் நிலை என்ன வாகும். ஆனால், அமையப் போகும் புதிய அரசியலமை ப்பு மாற்றத்தில் தமிழ் கூட்டமைப்பு அரசின் முக்கிய செயற்பாட்டாளர்களாக மாறியுள்ளார்கள்.

இந்நிலையில், இன்று தமிழர்களைப் பாதிக்கக் கூடிய தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் கோரி நிற்பது என்பது தமிழ்-முஸ்லிம் இன உறவில் மிகப் பெரிய விரிசலை உருவாக்கிவிடும் என தமிழர்கள் தெரிவிக்கிறார்கள்.

அத்தோடு, வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். எனவே, இவை தமிழர்களின் சகிப்புத் தன்மையை சோதிக்கும் செயல் என அவர்கள் கூறுகிறார்கள்.

அவ்வாறே, சமஷ்டி என்ற தனி நாட்டுக் கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம்கள் இலங்கைத் தேசத்தில் அதிகாரப் பகிர்வின்றி, அதிகார பரவ லாக்கத்தையே ஆதரிக்கிறார்கள். இது தமிழர் களின் நீண்டகால அபிலாஷைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

இவ்வாறு நீண்டகாலமாக சிறு சிறு பிரச்சினைகளுடன் அமைதியாக இருக்கின்ற தமிழ்-முஸ்லிம்  உறவை பாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கப் பார்க்கின்றார்கள் என்று தமிழ்த் தரப்பு பிரச்சாரம் செய்கிறது.

தமிழர்கள் தங்களது பூர்வீக மண்ணில் தங்களுடைய இறையாண்மையை நிலைநாட்டுவதற்காக சந்தர்ப்பம் கனிந்து வருகின்ற இக்கால கட்டத்தில், முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு, தத்தமது நலனுக்காகவும் தங்களது சுகபோக வாழ்வுக்காகவும் தங்களது பொக்கட்டை நிரப்புவதற்காகவும் ஈழத்தில் தமிழர்களின் சுயஉரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவாமல் எதிர்த்து நிற்கும் முஸ்லிம்களை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது எனக் கூறுகிறார்கள்.

ஒரு இனத்தை நசுக்கிப் பிழிந்து, அந்த இனத்தை அழித்து, இன்னொரு இனம் முன்னேற முடியாது. யாராக இருந்தாலும் இந்தக் கேவலம் கெட்ட அரசியலுக்காக ஒரே மொழி பேசும், மொழியால் ஒன்றுபட்ட தமிழர்களை ஏற்றுக் கொள்ள முஸ்லிம்கள் மறுக்கிறார்கள் என ஒவ்வொரு மூச்சிலும் தமிழர்கள் கூக்குரலிடுகிறார்கள்.

சில முஸ்லிம் தலைகளும் சிங்களமும் இணை ந்து தமிழர்களை நசுக்குவது என்பது எதிர்கால முஸ்லிம்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத் தும் என்பதை மீண்டும் மீண்டும் எத்திவைப் போம் என்பதே இப்போதைய அவர்களது அடி நாதமாக இருக்கின்றது.

இந்நிலையில், முஸ்லிம்கள் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? அவர்களுடன் வந்த குரங்கு ஆண்டால் என்ன? என்ற நிலையையா கடைப்பிடிக்க வேண்டும். ஏன் முஸ்லிம்கள் இந்நாட்டின் ஒரு இனமில்லையா? அவர்களுக்கும் வாழ்விட உரிமையில்லையா? தமிழர்கள் தங்களுக்கு ஒரு நீதியைக் கோருகிறார்கள் என்றால், ஏன் முஸ்லிம்கள் தங்களுக்கான கோரிக்கையை முன்வைக்கக் கூடாது.

தமிழ் பேசுகின்றோம் என்பதற்காக தமிழர்களை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என்று எந்த வேதநூல் கூறுகிறது. மனிதன் என்ற முறையில் மனிதாபிமானத்துடனும், சமூக நீதியுடனும் வாழுவோம், வளப்படுத்துவோம்.

ஆனால், முஸ்லிம்கள் தங்களது அனைத்து உரிமைகளையும் விட்டுவிட்டு, அடிமைகளாக தொடர்ந்தும் வாழ வேண்டியதில்லை. இவ்வாறு தனிநாடு பிரிந்து சென்று அங்கு வாழ்கின்ற சிறுபான்மையினர் நசுக்கப்படுகின்ற வரலாற்றை நாங்களும் அறிந்து வைத்துள்ளோம்.

இவ்வாறுதான், அன்று தமிழ் பேசுகின்ற இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களால் ஓரங்கட்டப்பட்ட வரலாறு எமக்கு சிறந்த பாடமாக இருக்கின்றது.

எனவே, முஸ்லிம் தலைமைகள் மீண்டும் மீண்டும் இவ்வாறான தவறை செய்யக் கூடாது. அதன் பின்னர் அவர்களிடம் கையேந்திப் பிச்சை வாங்கக் கூடாது. இன்றைய முக்கியமான கால கட்டத்திலேயே இவைகளை சரியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவே இன்றைய முதன்மையான பிரச்சினையாகும்.

மு. இஸ்ஸதீன் (சாய்ந்தமருது)

About the author

Administrator

Leave a Comment