சமூகம் விவாத மேடை

இஸ்லாமிய சிங்களவர்களாகவே வாழ விரும்புகிறோம்

Written by Administrator

இலங்கை முஸ்லிம்களை தென்பகுதி முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், வடக்கு முஸ்லிம்கள் என மூன்றாகப் பிரிக்கலாம். இவர்களில் தென் பகுதி முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக இருந்து, இன ஐக்கியத்தைப் பேணி வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல் வடக்கு கிழக்கிலும் தமிழர்களுக்கு மத்தியில் சகவாழ்வுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இவர்களில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தங்களது உரிமைக்காகவும், தனித்துவத்திற்காகவும், சமவுரிமைக்காகவும் தமிழர்களோடு போராடி வருகிறார்கள். ஆனால், இதுவரை முஸ்லிம்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என அப்பிரதேசத்து முஸ்லிம்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், தென்னிலங்கையில் சிங்கள சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் சிங்களவர்களோடு சகவாழ்வுடனும், விட்டுக்கொடுப்புடனும், சகோதரத்துவத்துடனும்தான் வாழ விரும்புகிறார்கள். இவர்களுக்கென்று தனித்துவமோ, விடுதலையோ தேவையில்லை. முஸ்லிம் அடையாளத்துடன் சிங்களவர்களோடு சிங்களவர்களாக சிங்கள மொழி பேசுபவர்களாகவே வாழ விரும்புகிறோம். தென் இலங்கையில் வாழும் முஸ்லிம்களாகிய நாங்கள், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் கோருவது போன்று எங்களுக்கான தனித்தேசம் ஒன்றை நாங்கள் கோரவில்லை. நாங்கள் மொத்த முஸ்லிம்களில் 70 வீதமாக இருக்கிறோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களத்தைத் தான் தங்களது கல்வி மொழியாகக் கொள்கிறார்கள். அதனையே தாய்மொழியாக்க விரும்புகிறார்கள்.

தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, தொடர்பாடல், அரசியல் போன்ற பல துறைகளில் அவர்கள் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூட அதனைக் குறிப்பிடுவது பொருத்தமாகும்.

வியாபாரம், கலாசாரம், அரசியல், சமூக உறவுகள் போன்றன இருசாராரையும் ஒருங்கிணைத்து வந்துள்ளன. அண்மைக்கால இனவாத சூழல் உருவாகும் வரை அந்த சகவாழ்வு நீடித்திருந்தது.

அண்மைக்காலமாக இருந்த இனவாத சூழலை தென்னிலங்கை முஸ்லிம்கள் வளர்க்க விரும்பவில்லை. அதேபோல், இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் யாப்பு மாற்றமாக இருந்தாலுமோ, ஏனைய வாக்களிப்பு முறையாக இருந்தாலுமோ இவர்களுக்கு எவ்வித தேவையுமில்லை.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன்போது தென்னிலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் குறித்துப் பேசினர். அதன்போது முஸ்லிம்களுக்காக இருக்கின்ற அரசியல் கட்சிகளில் இவர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினார்கள்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களோடு இணைந்து, தேசிய அரசியல் கட்சிகளிலேயே தங்களது அரசியல் செயற் பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் தனித்துவ முஸ்லிம் அரசியல் என்றும், அதில் போட்டியிட்டு சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரிவி னையை ஏற்படுத்துவது இன்றைய காலத்திற்குப் பொருத்தமற்றதாகும்.

இதனடிப்படையில் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் குருனாகல் மாவட்டத்திலும், அனுராத புரம் மாவட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு, பின்னர் அவர்கள் முஸ்லிம் கட்சி ஒன்றை பிரகடனப்படுத்தியது சிறந்த முறையல்ல.

அதன் விளைவுகளை அண்மையில் அழகாகக் காணக்கூடியதாக இருந்தது. அதாவது, இம்முறை தேசிய ஷூறா சபையின் சுதந்திர தின நிகழ்வுகள் குருனாகல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வு இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை நோக்கினால் புரியும்.

உண்மையில் என்ன நடந்தது, கடந்த பொதுத் தேர்தலில் குருனாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசி யக் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பின்னர் தங்களை குறித்த முஸ்லிம் கட்சி வேட்பாளர்களாக சித்தரித்திருந்தார்கள். இது குருனாகல் மாவட்டத்தி லுள்ள சிங்கள முஸ்லிம் ஒற்றுமையை சிதைப்பதாக நோக்கப்பட்டது. எனவே, தேசிய ஷூறா சபையின் சுதந்திர தின நிகழ்வு கூட நிறுத்தப்பட்டது.

இதுதான் இன்றைய சூழ்நிலை. எனவே, வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழர்களுடன் போட்டியிட்டு அவர்களுக்கான உரிமைகள், தனிநாடு, தேசம் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளட்டும். ஆனால், தென்னிலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் சிங்கள வர்களுடன் இஸ்லாமிய சிங்களவர்களாக வாழ விரும்புகிறோம். தயவு செய்து இந்த ஒற்றுமையை கெடுக்க வேண்டாம் என அனைத்து அரசியல் மற்றும் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

இஹ்திஸாம் – குருநாகல்

About the author

Administrator

1 Comment

  • I totally disagree with some brothers who are demanding a separate unit in Ampara for Muslims. We should like as a community that share the message of Islam and we should not just live for demanding rights alone. .. We are Ok in Sri Lanka we enjoy more rights in SL than Muslims in many countries. what we need to do is work with national parties…no need a separate Muslim party.. what Muslim party has done for Muslim community nothing but some milk this government for the personal benefit of some Muslim party..
    if we need to do something we should work with national party to get maximum benefit for our community

Leave a Comment