குடும்பம்-உளவியல்

குடும்ப வாழ்வு- எங்கிருந்து துவங்குவது?

முன்மாதிரி இஸ்லாமியக் குடும்பம்

 – எம்.என்.இக்ராம் –

 முஸ்லிம் சமுகத்தில் சிந்தனா ரீதியாகவும் நடைமுறையிலும் மொத்தமாகவேபாதிப்புக்குட்பட்ட இரு விடயங்கள் காணப்படுகின்றன.அவைதான் இஸ்லாமிய குடும்பவாழ்வும் பொருளாதார முறையும்.இவை இரண்டிலும் நடைமுறை எப்படிப் போனாலும்அவை பற்றிய அடிப்படையான இஸ்லாமிய கருத்துக்களே முஸ்லிம்களால் அந்நியமாய்பார்க்கப்படும் அளவு இன்று நிலமை மாறிப் போயுள்ளது.

 அந்த வகையில் இஸ்லாமிய பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்றுள்ளன, இடம்பெற்று வருகின்றன. ஆனால், குடும்ப வாழ்வு சம்பந்தமான கவனயீர்ப்பு இன்னும் எமது மரபு சார்ந்த பின்னல்களுக்குள்ளிருந்து வெளிவராது திணரிக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அடுத்து எமது குடும்பங்களில் இஸ்லாம் குடும்ப வாழ்வுசம்பந்தமாகக் கூறும் அடிப்படையான அம்சங்களைக் கூட காணமுயாதளவு குடும்ப வாழ்வுசிதறி சின்னாபின்னமாகிப் போயுள்ளதை நாம் காணலாம்.

   இஸ்லாமிய குடும்ப வாழ்வை உருவாக்குவதற்கான முயற்சியை எங்கிருந்து துவங்குவதுஎன்பது சிக்கலான ஒரு விடயமாக மாறியுள்ளது. ஒரு நல்ல மனைவியை, கணவனை தெரிவுசெய்தல் என்ற நிலையிலிருந்து ஆரம்பிப்போம் என்றால், அவர்களை சிதறிப்போன இந்தக்குடும்பங்களில் இருந்து தான் தெரிவு செய்தாக வேண்டும் என்பது ஒரு கசப்பானஉண்மையாகும். அவர்கள் இந்த சிதறிய குடும்பங்களினதும் அவற்றை அடிப்படையாகக்கொண்டு எழுந்துள்ள இந்த சமூகத்தினதும் குறைந்த பட்சமான பாதிப்பிலிருந்தாவதுவிலகியிருப்பார்கள் என்று எம்மால் உறுதியாகக் கூற முடியாது.

    இங்கு தான் இஸ்லாமிய சீர்திருத்த செயற்பாடுகள் பற்றி நாம் கவனம் செலுத்த வேன்டியதேவை எழுகிறது. இஸ்லாமிய குடும்ப உருவாக்கம் என்ற செயற்பாடு இஸ்லாமிய சீர்திருத்த செயற்பாடுகளுடன் இணைந்த வகையிலேயே இடம் பெறுதல் வேண்டும். அப்போது தான்நாம் எதிர்பார்க்கும் அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தின் சீரான இயக்கத்தில் பங்களிப்புசெய்யும் வகையிலான  குடும்பங்கள் தோற்றம் பெறும். இஸ்லாமிய சீர்திருத்தப் பணியின்மூலம் உருவாக்கப்படும் ஆணும் பெண்ணும் தான் அந்தக் குடும்பத்தின் அடிப்படையாகஇருப்பர்.

   இவ்வகையில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இது தொடர்பாக முன்வைத்தசிந்தனைகளில் இருந்து நாம் இப்பத்தியை ஆரம்பிக்க விரும்புகிறோம். அது எமது குடும்பங்களை சீர்படுத்திக் கொள்வதில் எமக்குத் தெளிவான வழிமுறையைக்காட்டித்தரலாம்.

நாம் என்ன விரும்புகிறோம்?

நாம்முதலில் விரும்புவது; ஆன்மாக்களின் விழிப்பை, உள்ளங்களின் உயிர்பை, உணர்விலும்சிந்தனையிலும் ஏற்படும் உண்மையான எழுச்சியை…. நாம் பலம் மிக்க, இளைய உள்ளங்களைவிரும்புகிறோம். புத்துணர்வு பெற்ற, செயலூக்கம் கொண்ட உள்ளங்களை விரும்புகிறோம். கொழுந்து விட்டெரியும் ரோசமுள்ள உணர்வுகளை விரும்புகிறோம். உயர்ந்த இலட்சியத்தையும் இலக்கையும் வரையறை செய்து அதை நோக்கி செயற்பட்டு அதனைஅடைந்து கொள்கின்ற வகையில் அமைந்த சிறந்த கனவுகளை, ஆசைகளை விரும்புகிறோம்.

  இந்த இலக்குகளும் இலட்சியங்களும் வரையறை செய்யப்பட வேண்டும். இந்தஉணர்வுகளும் சிந்தனைகளும் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.இவை ஒருகொள்கையாக,நம்பிக்கையாக மாறும் வகையில் ஒன்றுகுவிக்கப்பட வேண்டும். அதன் பின்னர்அங்கு வாதாட்டங்களோ, சந்தேகங்களோ தோன்றக் கூடாது. இந்த வரையறைகள் இன்றி இதுபோன்ற எழுச்சி ஒரு பெரும் வெட்ட வெளியில் பாய்ச்சப்பட்ட சிதறிய ஒழிக்கீற்றுக்கள்போன்றிருக்கும்.  அதில் வெளிச்சம் இருக்காது, வெப்பம் இருக்காது.

             இந்த விழிப்புணர்வு அல்லது எழுச்சி தனது செயற்பாட்டை தனி மனிதனில்மேற்கொள்ளும். அப்போது அவன் இஸ்லாம் தனி மனிதனில் விரும்புகின்ற பண்புகளைப்பெற்ற ஒரு சிறந்த தனிமனிதனாக இருப்பான். இஸ்லாம் தனிமனிதனில் அழகையும்அசிங்கத்தையும் பிரித்து உணர்கின்ற உணர்வை ஏற்படுத்த விரும்புகின்றது. சரியானதையும்தவறானதையும் பிரித்தறியும் திறனை ஏற்படுத்த விரும்புகிறது. சத்தியத்தின் முன்னால்பலவீனப்பட்டு நலிந்து போகாத உறுதியான செயற்திறன் மிக்க ஆழுமையை ஏற்படுத்தவிரும்புகிறது.

      இந்த தனிமனித சீர்திருத்தத்தின் பாதிப்பு அவரது குடும்பத்தில் ஏற்படும். குடும்பம்என்பது தனிமனிதர்களின் சேர்க்கையால் ஆன ஒரு நிறுவனம். அக்குடும்பத்திலுள்ளகுடும்பத்தலைவன் திருந்தி விட்டால் அங்குள்ள பெண்ணும் திருந்திவிடுவாள். அவர்கள்இருவரும் தான் குடும்பத்தின் தூண்கள். அவர்களிருவராலும் இஸ்லாம் இட்டுள்ளஅடிப்படைகளின் மீதமைந்த ஒரு வீட்டை உருவாக்க முடியும்.

இஸ்லாம் குடும்பத்திற்கான அடிப்படைகளை சீராக முன்வைத்துள்ளது. திருமணத்தின் போதுசிறந்த துணையை தெரிவு செய்ய வழி காட்டியுள்ளது. கணவன் மனைவியருக்கிடையிலானபிணைப்பை ஏற்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. இருவருக்குமிடையிலான கடமைகளையும் உரிமைகளையும் வரையறை செய்துள்ளது. இஸ்லாம் இரு தரப்பினருக்கும் இந்தத் திருமண இணைப்பின் விளைவாக வரும் பிள்ளையைஅப்பிள்ளை முதிர்ச்சியடையும் வரை பொடுபோக்காக இல்லாமல் கண்காணிப்பது கடமைஎன்று கூறுகிறது. இந்த திருமண வாழ்வின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு மிகநுணுக்கமான தீர்வுகளை முன்வைத்துள்ளது. இது பற்றிய எல்லா விடயங்களிலும் தீவிரமோகவனயீனமோ இல்லாது நடுநிலையான ஒரு வழிமுறையை கையாண்டுள்ளது.

    எனவே, குடும்பம் சீரடைந்து விட்டால் சமூகம் சீரடைந்து விடும். சமூகம் என்பது இந்தக்குடும்பங்களின் சேர்க்கைதான். உண்மையில் குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். சமூகம்என்பது ஒரு பெரியகுடும்பம்.

     நாம் இஸ்லாமிய தனிமனிதனை விரும்புகிறோம்… இஸ்லாமிய வீட்டை விரும்புகிறோம்… இஸ்லாமிய சமூகத்தை விரும்புகிறோம்… என்றாலும் அவையெல்லாவற்றுக்கும் முன்னால்இஸ்லாமிய சிந்தனை பரவ வேண்டும் என்று விரும்புகிறோம், அதன் மூலம் சமூகத்தின்எல்லா இடங்களிலும் இஸ்லாத்தின் பாதிப்பு ஏற்பட வேண்டும். சமூகத்தின் எல்லாவிடயங்களும் இஸ்லாமிய சிந்தனையால் வழிநடாத்தப்படவேண்டும். அது இல்லாமல் நாம் ஒன்றையும் சாதிக்க முடியாது.

  நாம் அனைவரும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்என்று விரும்புகிறோம். எல்லா விடயங்களையும் மேற்கின் வரையறைகளுக்குள்ளால் நின்று, போக்குகளுக்குள்ளால் நின்று பாரம்பரியமாக சிந்திக்கும் நிலையிலிருந்து நாம் மாறவேண்டும்.

   நாம் வரலாற்றில் சிறப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்த ஒரு சமூகத்தைபின்னணியாகக் கொண்டவர்கள் என்ற வகையில் தனித்துவமான பெறுமானங்களையும் ஆளுமைகளையும் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

About the author

Administrator

1 Comment

 • ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகின்ற கட்டுரை. ஆனால் இதற்கு செயல் வடிவம் கொடுப்பது எப்படி? இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது “பிரச்னைகளின் உலகமாக” மாறி விட்டிருக்கின்றது. எந்த ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்படவே முடியாத சிக்கலாக (crisis) மாறி மனித சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
  இன்றைய நவீன உலகின் பிரச்னைகளைத் தீர்த்திட புதிய சிந்தனைகள் தேவை. Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking, – என்று புதுப்புது வழிமுறைகளை எல்லாம் கையிலெடுத்துக் கொண்டு களத்தில் இறங்கிட வேண்டிய தேவை அவசர அவசியமாக விட்டிருக்கிறது.
  ஆனால் எங்களிடம் குர்ஆன் இருக்கின்றது, நபிவழி இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலாதவர்களாக நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
  பிரச்னை – சாதாரணமானதாக ஒன்றாக இருந்தால் – ஒரு வரியில் தீர்ப்பு சொல்லி விடலாம் தான்! ஆனால் சீர் கெட்டிருக்கும் குடும்ப அமைப்பை சீர்செய்தல் என்பது ஒன்றும் சாதாரணப் பிரச்னை அல்லவே!
  ஒட்டு மொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்று “அடித்தளத்தில் ஓட்டை போடப்பட்ட கப்பலாய்” நம்மை மாற்றியிருக்கும் பிரச்னை தானே இது! எனவே நாம் – குர் ஆன் மற்றும் நபிவழி ஆகியவற்றுடன் நவீன வழிமுறைகளைக் கையிலெடுத்துக் கொண்டு, சீர்திருத்தங்களை நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டிடும் அழகிய தீர்வு ஒன்றை நாம் கண்டாக வேண்டும் என்கிறோம்.
  எனது நீண்ட கால ஆசை ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  தேவை: திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம்!
  முதலில் – ஒத்த கருத்துடைய, ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க, குடும்ப நல சீர்திருத்தத்தில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு சிலர் ஒன்று சேர்ந்து திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம் ஒன்றை நிறுவிட வேண்டும்.
  திருமணத்துக்கு வழிகாட்டும் இந்த ஆய்வு மையம் ஒரு இயக்கம் சாராத அமைப்பாக விளங்கிட வேண்டும். சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் அது பயன்படக் கூடியதாக விளங்கிட வேண்டும். பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து செயல்படுதல் மிக நன்று! அல்லது பொதுவான சமூக நல அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயல்படலாம்.
  ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்கள் – அனைவரும், திருமண சீர்திருத்தம் குறித்த நவீன கால இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துகளை எல்லாம் ஒன்று திரட்டி, அவைகளை ஆழ்ந்து படித்து, தங்களுக்குள் விவாதித்துத் தெளிவான முடிவுகளை அவர்கள் எட்டிட வேண்டும்.
  திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் செயல்பாடுகள்:
  அ) திருமணம் ஆகாதவர்களுக்கு இஸ்லாமியப் பயிற்சி அளித்தல்: இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட அல்லது ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ள திருமணம் ஆகாத இளைஞர்களை அழைத்தல்; அவர்களைப் பதிவு செய்து கொள்தல்; அவர்களுக்கு அறிவுரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், உளரீதியாகவும் பயிற்சி அளித்தல்; இஸ்லாமியத் திருமணம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்; திருமணத்துக்கு அவர்களைத் தயார் செய்தல்; நல்லதொரு துணையைத் தேர்வு செய்திட வழிகாட்டல்; மகிழ்ச்சியான இல்லறத்துக்கு வழிகாட்டுதல்; கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுத்தருதல்; திருமணத்துக்குப் பின் அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்; குழந்தை வளர்ப்பில் வழிகாட்டுதல்; அனுபவங்களைப் பகிர்ந்து கொள்தல். பயிற்சிகள் அனைத்தும் சொற்பொழிவுகளாக அல்லாமல் பயிலரங்கங்களாக வைத்து நடத்தப்பட வேண்டும்.
  ஆ) ஒவ்வொருவரின் ஆளுமை குறித்து மதிப்பீடு செய்து தருதல்: ஒவ்வொருவருடைய ஆளுமைகளை வகைப்படுத்தித் தரும் (personality types) இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. இந்த ஆளுமை வகைகளைப் பற்றிய அறிவு, பொருத்தமான துணை தேடிட பெரும் உதவியாக இருக்கும்.
  ஒருவர் தனிமை (introvert) விரும்பியா? அல்லது வெளியே சென்று (extrovert) மற்றவர்களுடன் பழகுவதை விரும்பக்கூடியவரா என்பதை மதிப்பீடு செய்து தரும். ஒருவர் உணர்வுக்கு (feeling oriented) மதிப்பளிப்பவரா? அல்லது அறிவின் (thinking oriented) அடிப்படையிலேயே செயல்படுபவரா என்பதை எடுத்துச் சொல்லும். ஒருவருடைய பலம் என்னென்ன, பலவீனங்கள் என்னென்ன என்பதை கோடிட்டுக் காட்டும். இப்படிப்பட்ட ஆளுமை மதிப்பீட்டின் அடிப்படையில் – ஒருவர் தன் பலங்களை வலுப்படுத்திக் கொண்டு பலவீனங்களை வெல்வது எப்படி என்பதை நமது பயிற்சிகளின் வழியே அவர்களுக்கு வழிகாட்டலாம்.
  இ) இவ்வாறு நமது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும் இளைஞர்கள் – குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு தடவை நேர்காணல் செய்யப்பட வேண்டும்; அவர்கள் மேலும் முன்னேறிச் சென்றிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஒரு ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகே அவர்கள் திருமணத்துக்குத் தயாராக வேண்டும்.
  ஈ) திருமணத்துக்குப் பின்னர்…. திருமணத்துக்குப் பின்னர் கொஞ்ச காலம் (ஒரு ஆண்டு) கழித்து – பயிற்சி அளிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்கள் அழைக்கப்பட வேண்டும். அவர்களிடம் நேர்காணல் மூலமாக பல அரிய தகவல்கள் கிடைத்திடும். அவை அனைத்தும் அமானத்தாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
  இவ்வாறு ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடம் பயிற்சி பெற்றுத் திருமணம் செய்து கொண்ட அனைவரின் இல்லற வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விடலாம். இறுதியாக நமது ஆய்வின் முடிவில் நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் என்னவெனில் – திருமணம், இல்லறம் குறித்து வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், இளைஞிகளில் எத்தனை சதவிகிதம் பேர் – மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள்; ஒருவருடைய உரிமைகளை இன்னொருவர் மதித்து வாழ்கிறார்கள்; ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் மதித்து வாழ்கின்றார்கள்? திருமணத்துக்குப் பின் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின? எத்தனை சதவிகிதம் பேர் தங்களுக்குள் தோன்றக்கூடிய கருத்துவேறுபாடுகளின் போது தொடர்ந்து பேசிக் கொண்டு கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டிய முறையில் தீர்த்துக் கொண்டார்கள்? மேலும் அவர்களுக்குள் சவாலாக விளங்கக் கூடிய பிரச்னைகள் என்னென்ன? (அந்தப் பிரச்னைகளுக்கு கவுன்ஸலிங் மூலம் தீர்வு காணவும் வழி வகை செய்யப்படலாம்). அதன் பின்னர் – நமது ஆய்வுகள் தெரிவிக்கின்ற செய்திகளை நமது முஸ்லிம் சமூகத்துடன் பரிமாறிக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ஆய்வுகளிலிருந்து முஸ்லிம்களின் புதிய தலைமுறை எண்ணற்ற பாடங்களை நிச்சயமாகப் படித்துக் கொள்ளும்! நல்லதொரு மாற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்!!

Leave a Comment