TECH

உலகை ஆழ வரும் IoT

  – மீயல்லை ஹரீஸ் –
பௌதீக உலகத்தை நேரடியாக கணனி அமைப்புக்களுடன்  ஒன்றிணைப்பதன் மூலம் மேம்பட்ட திறனுடைய, துல்லியமான மேலும் பொருளாதார நன்மை தரக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கக் கூடிய வகையில் பௌதீக சாதனங்கள், வாகனங்கள் ,கட்டடங்கள் உட்பட ஏனைய பொருட்களை இணையத்துடன் ஒன்றுடனொன்று இணைக்கும் தொழிநுட்பமே The internet of things (IoT) ஆகும்.
இவற்றினுள் பதிக்கப்படும் இலத்திரனியல், மென்பொருள், உணர்கருவிகள், முனைப்பிகள் மேலும் வலைப்பின்னல் இணைப்பு போன்றன ஒன்றிலிருந்து இன்னொன்று தகவல் எடுக்கவும் பரிமாறிக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது .
ஸ்மார்ட் கட்டங்கள், ஸ்மார்ட் வீடுகள், ஸ்மார்ட் போக்குவரத்து மற்றும் ஸ்மார்ட் நகரங்கள்  போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள IoT ஒவ்வொரு பொருளையும் பிரத்தியேகமாக  அடையாளம் காணக்கூய வகையில் கணினி அமைப்புக்களுடன்  ஒருங்கிணைந்து செயற்பட வல்லது  ..
காணப்படும்  வலைப்பின்னல் உள்கட்டமைப்பு ஊடாக பொருட்களை தொலைவிலிருந்து உணரவும் கட்டுப்படுத்தவும் IoT  இடமளிக்கிறது. 2020 இல் 50 பில்லியன் பொருள்களை  IoT தன்னுள் கொண்டிருக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர் .
துபாயில் நிறைவு பெற்ற 36 ஆவது GITEX வார கண்காட்சியின் பிரதானமான பேசு பொருளும் IoT தான் . http://www.gitex.com/
Displaying WhatsApp Image 2016-10-19 at 6.33.33 PM.jpeg
Displaying WhatsApp Image 2016-10-19 at 6.33.22 PM.jpeg

About the author

Administrator

Leave a Comment